பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் உபதேசம் இந்த நாட்டில் குருமுகமாக உபதேசம் பெறுவதை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்கள். குரு மாணாக்கன் செவியில் கேட்கும்படியாக இரகசியத்தைச் சொல்கிறார். சொல்பவனும் கேட்பவனும் மாத்திரம் உணரும் வகையில் செல்வதனால் மந்திரோபதேசத்தை இரகசியம் என்று சொல்கிறார்கள். இரகசிய மானாலும் அது பலரும் அறிந்த இரகசியந்தான். உலகறிந்த இரகசியம் என்று சொல்வதை நாம் கேட்கிறோம். அது ஏதோ முரண்பாடு உள்ளது போலத் தோன்றுகிறது. ப்லரும் அறிவது இரகசியத்துக்கு விரோதம் என்று நாம் எண்ணிக் கொண்டிருக் கிறோம். உண்மை அது அன்று. பலர் அறிவதனால் இரகசியத் தின் தன்மை மாறாது. எப்படி அறிகிறார்கள் என்பதில் தான் அந்தத் தன்மை நிற்கிறது. அது சமயத்தில் ஒருவன் மட்டும் கேட்க உணர்த்துவதனால் அது இரகசியமாகிறது. ஆயிரம் பேருக்குக் கேட்கும்படியாக மேடையின்மேல் நின்று ஒன்றைச் சொன்னால் அது இரகசியம் ஆகாது. ஆனால் அந்த ஆயிரம் பேரில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்துப் பிறர் அறியாதவண்ணம் சொன்னால் அது இரகசியம் ஆகிறது; ஆயிரம் பேர் அறிந்த இரகசியமாகிறது. இரகசியமாகக் குருநாதன் உபதேசம் செய்வது எதற்காக என்று கேட்கலாம். உபதேசம் செய்யும் மந்திரத்துக்கு ஒரளவு பெருமை இருக்கிறது. ஆனால் அதனால் உண்டாகும் பயன் உபதேசம் செய்யும் குருவையும் உபதேசம் பெறும் மாணாக்கனின் பக்குவத்தையும் பொறுத்திருக்கிறது. சிறந்த குரு மாணாக்கனுடைய பக்குவத்தை நன்கு அறிந்தே உபதேசம் செய்வார். அந்த உப தேசத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கிடக்கும் சீடனுக்கே அந்த உபதேசம் கிடைக்கும். மாணிக்கவாசகர், இறைவன் தம் பக்குவத்தைப் பாராமல் உபதேசம் செய்தான் என்பதை ஓர் உவமை மூலமாகச் சொல்கிறார். சின்னஞ்சிறு குழந்தையின் கையில் விளையாட்டுச் செப்புகளைக் கொடுக்கிறோம். மரத்தாலோ, வெண்கலத்தாலோ, இரும்பினாலோ ஆன செப்புக்களைக் கொடுப்பது வழக்கம். ஒரு செல்வர் தம் குழந்தைக்குப் பொற் கிண்ணம் ஒன்றையே விளையாடக் கொடுத்து க.சொ.11-14 199