பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 சுட்டு இது. அந்த இரகசியத்தை மலை நாட்டு ஊர் வெளியாக்கி விட்டதாம். எப்படி வெளியாக்கியது? எதை வெளியாக்கியது - இவற்றிற்கு நேர்முகமான விடைகளைப் பாட்டில் காண முடியாது. ஆனாலும் குறிப்பாகப் பெற வைத்திருக்கிறார். குறிப்பு ஒரு வேடிக்கையான விடுகதை உண்டு. "காயும் கோணற்காய் கொள்ளடா மைத்துனா கதையும் விடுவித்தேன் சொல்லடா மைத்துனா" என்பது அது. இந்த விடுகதையிலேயே விடையும் இருக்கிறது. கொள் அடா என்பது இதை ஏற்றுக் கொள் என்ற பொருளை முதலில் தந்து, பின்பு கொள் என்னும் தானியம் என்ற பொருளை யும் தந்து விடையைப் புலப்படுத்துகிறது. அதுபோல, “உன் இரகசியத்தை இன்ன வகையில் வெளிப்படுத்தி விட்டது” என்று சொல்லாமல், முருகனைத் துதிக்கும் வார்த்தைகளிலே அந்தச் செய்தி புலப்படும்படி இணைத்திருக்கிறார். கோடுகுழல் சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னம் குறிச்சியில் சென்று கல் யாணம் முயன்றவனே. "கொம்பும் குழலும் வேறு சின்னங்களும் முழங்கக் குறிஞ்சி நிலத்தவர்களாகிய குறவர்களின் சிறு பெண்ணை முன்பு அவர்கள் ஊருக்கு வலியச் சென்று திருமணம் செய்து கொண்டவனே!" என்று முருகனை விளித்துத் துதிக்கிறார். இந்த விளியே அந்த இரகசியம் வெளிப்பட்டதைப் பொதிந்து வைத்திருக்கிறது. இராமாநுஜர் கோபுரத்தின் மேல் ஏறித் திருமந்திரத்தை யாரும் அறியச் சொன்னாராம். முருகனோ மலைமேல் ஏறி யாரும் அறிய வெளியிட்டானாம்; மலைமேல் உள்ள ஊர் வெளியிடும்படி செய்துவிட்டதாம். வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட செயலிலே முருகனுடைய பெருங்கருணை வெளியாகிறது. ஐந்து முகமுடைய 2O2