பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் சிவபிரான் ஆறுமுகமுடைய முருகனாக எழுந்தருளியதற்குக் காரணம் எதுவோ அது அந்த மணத்தில் வெளியாகியது. அப்படி வெளியான இரகசியம் என்னவென்பதைச் கூர்ந்து பார்க்கலாம். அதுவும் இதுவும் முருகன் தேவர்களுக்கெல்லாம் பெரிய தலைவன்; அவர் களுடைய வாழ்வுக்கு ஆதார பூதமானவன். அவனுக்குக் கந்தர்வ லோகத்தில் திருமணம் நடக்க வேண்டும். தேவர்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலையும் காட்டி, மண்டபம், பந்தல் முதலிய அமைப்புகளை நிறுவி அலங்காரம் செய்ய, தேவர்களும் ஞானி யரும் குழுமிய அலங்காரப் பெரு மண்டபத்திலே திருமணம் நிகழ வேண்டும். தேவயானைக்கு அப்படித்தான் நடந்தது. ஆனால் வள்ளியம்மை திருமணம் மலை நிலத்துச் சிற்றுாராகிய குறிச்சியிலே நடந்தது. குறவரும் குறத்திமாருமே திருமணத்திற்கு வந்தார்கள். மணமகளோ குறிஞ்சிக் கிழவர் சிறுமி. தேவலோகத்தில் கல்யாணம் நடந்தால் ஒரு பால் மறை முழங்கும்; ஒரு பால் தேவதுந்து பி இயம்பும்; ஒருசார் தும்புரு நாரதர் வீணை வாசிப்பார்கள்; ஒரு பால் நந்தியும் திருமாலும் முழவு இசைப்பார்கள்; அரம்பைமார்கள் ஆடுவார்கள்; கின்னரர் கீதம் பாடுவார்கள்; கந்தருவரும் வித்தியாதரரும் இன்னிசை எழுப்புவார்கள். இவற்றில் ஒன்றையும் விரும்பாமல் முருகன் ஓடிவந்தான். இங்கே என்ன வாத்தியங்கள் முழங்கின? குறவர் கள் ஊது கொம்பை ஊதினார்கள், மூங்கிலைத் துளைத்த குழலை ஊதினார்கள்; இன்னும் என்ன எனனவோ சின்னங்களை ஊதி னார்கள். தேவலோகக் திருமணக் காட்சி எங்கே இந்த மலைக் காட்டுக் கல்யாணம் எங்கே! "வள்ளி கல்யாணத்தில் என்ன என்ன கச்சேரி?" என்று தேவ லோகவாசிகள் கேட்கிறார்களென்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்லும்படி இருக்கும்? “நூறு தம்பட்டங்கள், இரு நூறு தாரைகள், முந்நூறு ஊது கொம்புகள், நானூறு குழல்கள்” என்று சொல்ல வேண்டும். அவர்கள் அதைக் கேட்டுச் சிரிப்பார்கள். தாரை ஊதுவதாக எண்ணிக் கொண்டு காதைப் பொத்திக் கொள் வார்கள். அவர்களுக்கு அவற்றை நினைத்தாலே அருவருப்பாக இருக்கும். 2O3