பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் போடுங்கள் போதும். வெறும் வற்றல் குழம்பு வையுங்கள்' என்று சொல்கிறார். இப்படிச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். முருகனும் அவ்வாறே சொன்னான் போலும் 'எனக்கென்று வேறு ஊர் வாத்தியங்களை அழைக்க வேண்டாம். உங்கள் ஊரில் உள்ள கொம்பும் குழலும் போதும்' என்று சொல்லியிருப்பான். வள்ளி திருமணம் அருணகிரி நாதருக்குச் சொன்ன உபதேசம் எதுவோ, அதன் வெளியீடாக இருப்பது வள்ளியம்மை திருமணம். அடியவரை ஆட்கொள்ளும் செயலும் அந்தத் திருமணச் செயலும் ஒரே பயனை உடையவை. வெவ்வேறாகத் தோற்றினாலும் இரண்டும் முருகன் பெருங்கருணையை மேற்கொண்டு, தக்க பக்குவம் இல்லா திருப்பினும் தன்னை ஓரளவு நினைத்த அளவிலே அப்படி நினைப்பவர்பால் தானே வலியச் சென்று ஆட்கொள்வான் என்ற உண்மையைக் காட்டுகின்றன. வள்ளி திருமணம், முருகன் ஆன்மாவை வலியவந்து தடுத்தாட் கொள்ளும் கருணைத் திருவிளையாடல். வள்ளி நாயகி தவ முனிவருக்கும் மானுக்கும் பெண்ணாகப் பிறந்தவள். அதற்கு முன் திருமாலின் பெண்; முருகனை மணக்கும் உரிமை உடைய வள். ஆயினும் வள்ளிமலையில் நம்பிராஜனுடைய பெண்ணாக வளர்ந்தாள். தான் குறமகள் என்றே எண்ணி வாழ்ந்தாள். குறமகளிருடைய பழக்க வழக்கங்களையே மேற்கொண்டாள். வேடர்களுக்கு நடுவே இருள் அடர்ந்த காடுகளில் யானையும் பிற விலங்கினங்களும் திரியும் குறிஞ்சி நிலத்து ஊரில் வாழ்ந் தாள். தினைப் புனத்தில் அந்தப் புன்செய்த் தானியத்தைக் காவல் காத்துக் கொண்டு கிளி முதலியவற்றை ஒட்டினாள். ஆன்மாவும் இந்த நிலையில்தான் இருக்கிறது. இறைவனோடு ஒன்றி வாழும் உரிமையையுடைய அது பிரபஞ்சமாகிய காட்டில் ஆணவமென்னும் யானையும் காமம் கோபம் முதலிய விலங்கினங் களும் திரியும் சூழலில் ஐம்புலமாகிய வேடர்களிடையே வாழ்கிறது. சிற்றின்பமாகிய தினையைத் தனக்குரியதாக எண்ணி அதை நுகர்வதில் பற்றுடையதாகிப் பகையும் அழுக்காறும் பிறரை வெருட்டும் இயல்பும் வளரத் தன் உரிமையை மறந்து நிற்கிறது. 2O5