பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வள்ளிநாயகி குறவாணர் குல வழக்கத்தின்படி முருகனை எண்ணி அன்பு செய்தாள். வேறு வகையான சாதனம் ஒன்றும் பயிலவில்லை. முருகன் தான் உள்ள இடத்துக்கு அவள் வரட்டும் என்று காத்திராமல், அவள் உள்ளத்தில் உள்ள சிறிதளவு அன்பையே பற்றுக் கோடாகக் கொண்டு அவளை ஆட்கொள்ள வந்தான். பக்தி நெறியில் ஒரளவு புகும் ஆன்மாவுக்கு இன்னும் பக்குவம் நிரம்ப வேண்டும் என்று காத்திராமல் அருள் செய் வதற்கு முருகன் எழுந்தருளுவான். வள்ளியம்மையினிடம் தன் திருவுருவத்தைக் காட்டி, என்னை மணந்து கொள் என்றால் அப்பெருமாட்டி உடனே வணங்கி முருகனிடம் ஈடுபட்டிருப்பாள். அவன் அவ்வாறு செய்யாமல் வேடனாகி வந்தான்; வேங்கை மரமானான்; கிழ வனாக வந்து கெஞ்சினான். வள்ளிநாயகியின் கற்பு நெறியைச் சோதிக்கச் செய்த சோதனைகள் அவை. சோதனை வந்தால் உள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல் வெளிப்படும். முருகன் காளைப் பருவ வேடனாகி வந்து நயந்தும் பயந்தும் பேசிய பேச்சுக்களிலே வள்ளி நாயகி மயங்காமல் இருந்தாள். அதனால் வருந்தினவனைப் போல முருகன் பாவனை செய்தாலும் அவன் திருவுள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி கொண்டான். நம்முடைய சோதனைகளில் இவள் வெற்றி பெறுகிறாள் என்று உணர்ந்து பெருமிதம் அடைந்தான். சோதனையும் போதனையும் அன்புடையவனைத் தடுத்தாட் கொள்ள வரும் இறைவன் அவனைச் சோதிக்க முற்படுகிறான். சோதனையும் போதனையும் இறைவன் அடியார்களிடம் செய்கிறான். சோதனையினால் அன்பருடைய அன்பு பின்னும் முறுகி உரம் பெறுகிறது. நன்றாகப் படித்த மாணாக்கன் பரீட்சைக்கு அஞ்சாமல் அதில் தன் ஆற்றலைக் காட்டி வெல்வதைப் போல, உலகில் உண்டாகும் இடையூறுகளையெல்லாம் இறைவன் திருவருளென்றே எண்ணிச் சோதனைகளில் தேர்ச்சி பெறுகிறார். அப்போது இறைவன் போதனை செய்கிறான். இறைவன் பல சந்தர்ப்பங்களில் நாம் அறிவு பெறும் வகையைக் காட்டுகிறான். அந்த அநுபவங்களினால் 2O6