பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் தெளிவு பெறுவோமானால் நம் பக்குவம் உயர்கிறது. இல்லை யானால் பிரபஞ்சச் சேற்றில் அமிழ்ந்து போக வேண்டியதுதான். வள்ளிநாயகிக்கு முன் விநாயகரை யானையாக வரச் செய் தான் முருகன். அந்த யானையைக் கண்டு அஞ்சி முருகா என்று கதறிக் கிழவனாக வந்த அவனைச் சார்ந்தாள். அப்போது முருகன் தன் திருவுருவத்தைக் காட்டி அருள் புரிந்தான். யானையைக் கண்டவுடன் வள்ளிநாயகிக்கு, "உயிர் போய்விடும்' என்ற அச்சம் உண்டாயிற்று. அவள் உள்ளத்தில் அப்போது முருகனுடைய நினைவு உச்சநிலையில் எழுந்தது. உயிருக்கு மோசம் வரும் என்ற உணர்வு வரும்போதுதான் இறைவனிடம் உரமான பக்தி எழும். "ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க வென்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருள்வாய்' என்று கந்தரலாங்காரத்தில் பின்னே ஒரு பாட்டில் அருணகிரி நாதர் சொல்லப் போகிறார். இறைவனையன்றி வேறு துணையில்லை என்பதை ஒருவன் மற்றச் சமயங்களில் தெளிவாக உணர முடிவதில்லை. மரணத் துன்பத்தை உள்ளவாறு அறிந்தால்தான் அந்த உணர்ச்சி ஏற்படும். வள்ளியம்மைக்கு அத்தகைய உணர்வு வந்தபோது முருகன் ஆட்கொண்டான். வள்ளிநாயகி திருமணம் ஆன்மா பரமான்மாவோடு ஒன்று படும் திருமணம். வேறு வேறு வகையில் சாதனம் புரிந்து பக்குவம் உயர்ந்தால் இறைவன் திருவருளுக்கு ஆளாவது முறை. முருகனோ தன்னை நம்பின அடியவனிடம் பக்குவக் குறைபாடு இருந்தாலும் கருணை மிகுதியால் அவனை நாடி வந்து சோதனை செய்து ஏற்றுக் கொண்டு இன்பம் அருளுகிறான். பக்தனுக்குள்ள பக்குவக் குறைவை முருகனிடம் உள்ள கருணை மிகுதி, பொருட் படுத்தாமல் நிரப்புகிறது. அநுபவ ஒற்றுமை இந்த அநுபவத்தை வள்ளிநாயகி பெற்றாள். அருணகிரி யாரும் பெற்றார். மற்றவர்களைப் போலவே உலகியலில் உழன்ற 2O7