பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அவருக்கு முருகன்பால் அன்பு முகிழ்த்தது. முருகன் பெருங் கருணையை மேற்கொண்டு தடுத்தாட் கொண்டான். பலவகைச் சோதனைகளைச் செய்து பக்குவம் ஏற்றிப் போதனை செய்து ஆட்கொண்டான். அவருடைய துன்பங்களைத் திருவுள்ளத்தில் அடைத்து வலியத் தடுத்தாட்கொண்டு அவர் செவி கேட்கும் வண்ணம் போதனை புரிந்தான். கின்னம் குறித்தடியேன் செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம் என்று அந்தப் போதனையையே குறித்தார். வள்ளிநாயகியிடத்தும் இந்தச் சோதனையும் போதனையும் நிகழ்ந்தன. அருணகிரிநாதர் பெற்றதை அவர் ஒருவரே அறிவார். வள்ளிநாயகி பெற்றதை அன்று மலைநாட்டு ஊராகிய குறிஞ்சி முழுவதும் அறிந்தது. கோடு குழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை, முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்ற போது அந்தக் குறிச்சி, அடியார்களிடம் இரகசியமாக நிகழும் சோதனையையும் போதனையையும் வெளியாக்கிவிட்டது. 'முருகன் பெருங் கருணை உடையவன்; பக்குவத்தில் குறைபாடு இருந்தாலும் வலியவந்து தடுத்தாட் கொள்வான்; சோதனையால் பக்குவத்தை முறுகச் செய்து போதனையால் இன்ப அநுபவத்தை வழங்குவான் என்ற இரகசியத்தை அருணகிரிநாதர் அறிந்தார். அது தமக்கு மாத்திரம் தெரிந்த இரகசியம் என்று நினைத்தார். ஆனால் அது மலைநாட்டு ஊர் அறிந்த இரகசியம் என்பதைப் பின்பு உணர்ந்தபோது, 'முருகா, நீ எனக்குச் சொன்ன இரக சியத்தை முன்பே குறிச்சி வெளியாக்கி விட்டதே' என்று அவனைப் பார்த்தே சொல்கிறார். கின்னம் குறித்துஅடி யேன்செவி நீ அன்று கேட்கச்சொன்ன குன்னம், குறிச்சி வெளியாக்கி விட்டது; கோடுகுழல் சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே! 2O3