பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் (ஊது கொம்புகளும் பலவகையான குழல்களும் பிற சின்னங்களும் முழங்க, முன் ஒரு காலத்தில் குறிஞ்சி நிலத்து ஊருக்குப் போய்க் குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்களாகிய குறவாணர்களுடைய சிறு மகளாகிய வள்ளியைத் திருமணம் புரிந்து கொண்டவனே அடியேன் பட்ட துன்பங்களைப் போக்க எண்ணி, அடியேனது செவி கேட்கும்படியாக நீ அன்று திருவாய் மலர்ந்தருளிய இரகசியத்தை அந்தக் குறிஞ்சி நிலத்து ஊர் யாரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி விட்டது. பசி குறித்துத் தந்த உணவு என்னுமிடத்துப் பசியைப் போக்குவதை எண்ணித் தந்த உணவு என்று பொருள்படுவது போல, இங்கே கின்னத்தைப் போக்குதலை எண்ணி என்று பொருள் செய்ய வேண்டும். கின்னம் - துன்பம். 'நினைவார், கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே' என்று அநுபூதியில் பாடுவார். செவி கேட்கச் சொன்னது உபதேசம். குன்னம் - இரகசியம்; குஹ்யம் என்பதன் திரிபுபோலும். குறிச்சி - குறிஞ்சி நிலத்து ஊர்; வேடர் வாழும் இடம்; குறிஞ்சி புக்க மான் போலவும்' என்பது பழைய உரைகாரர்கள் கூறும் உவமை. வெளி யாக்குதல், யாவரும் எளிதில் அறியச் செய்தல். ஒருவர் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி சொன்ன மறையை யாவரும் முயற்சியின்றியே எளிதில் உணரும்படி அந்தக் குறிச்சி செய்து விட்டது. அடியேன் செவி கேட்க அன்று நீ சொன்ன என்று கூட்டுக. அன்று: நெஞ்சறி சுட்டு. குன்னத்தைக் குறிச்சி வெளியாக்கி விட்டது. கோடு-ஊது கொம்பு. குழல் - மூங்கிலால் செய்த புல்லாங்குழல். சின்னம் - தாரை முதலியன. குறிக்க - ஒலிக்க. குறிஞ்சிக் கிழவர். குறிஞ்சி நிலத்தில் வாழும் உரிமையுடையவர்கள்; வேட்டுவர். முன்னம் - பழங்காலத்தில், சென்று - தானே வலியச் சென்று. முயன்றவன் - புரிந்தவன். - 2CŞ