பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை






வாழ்க்கைக் கூத்து

முருகப் பெருமானுடைய பெருமையை அலங்காரமாகச் சொல்லிவருகிறார் அருணகிரியார். எம்பெருமான் மெல்ல மெல்லத் தவழ்ந்து வர, அவன் இடையில் கட்டப்பட்டுள்ள கிண்கிணி ஒலிக்கிறது. அந்த நாதத்தினாலே மேரு மலையும், ஏனைய எட்டுக் கிரிகளும் அசைகின்றன. அதனை முன்னே சொன்னார். அந்தப் பெருமான் சற்று வளர்ந்துவிட்டான். இப்பொழுது எழுந்து உட்கார்ந்து கொண்டான்; உட்கார்ந்து கொண்டு கையைத் தட்டுகிறான்.

குழந்தைப் பருவம்

   குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விளையாட்டுச் சிறப்பாக இருக்கும். குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் அதற்குக் காப்பு இடுவார்கள்; தெய்வங்கள் இந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்று சொல்லி, வேப்பிலைக் காப்பும், தங்கக் காப்பும், வெள்ளிக் காப்பும் இடுவார்கள். அந்தப் பருவத்தைப் பிள்ளைத் தமிழில் வருணிப்பார்கள் புலவர்கள். அதுவே காப்புப் பருவம். அடுத்தபடி தொட்டில் இடுவார்கள். தொட்டில் இட்டுத் தாலாட்டுப் பாடும் பருவத்திற்குத் தாலப் பருவம் என்று பெயர். குழந்தை இங்கு இங்கு என்று சொல்லும்; பூமியில் படுத்துக் கொண்டு நீந்தத் தொடங்கும். இந்தப் பருவத்திற்குச் செங்கீரைப் பருவம் என்று பெயர். பின்பு குழந்தை எழுந்து உட்கார்ந்து கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டும். அது சப்பாணிப் பருவம், பாணி என்பது கை. கையோடு கை சேர்த்துத் தட்டுவதனால் அப்பெயர் வந்தது. அடுத்தது முத்தந் தா என்று கேட்கும் முத்தப் பருவம். வா வா என்று அழைப்பது வருகைப் பருவம். இப்படியே பத்துப் பருவங்கள் உண்டு. 
  இப்போது அருணகிரியார் சப்பாணிப் பருவத்தைப் பாடுகிறார். முருகன் சப்பாணி கொட்டுகிறதனால் விளையும் விளைவைச்