பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! போய்விடுவேனே' என்று புலம்பிப் புலம்பி ஒவ்வொரு விநாடியும் நலிந்து கொண்டிருக்கிற மக்களுக்கு தம் நிலையை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக அருணகிரிநாதர் இதைப் பாடவில்லை. நம்மைப் போன்ற மக்கள் முருகவேளின் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும், எமனை நினைந்து குமைந்து குமைந்து வாழ்ந்து மடிகின்ற நிலையினின்று மீட்சி பெறவேண்டும் என் பதற்காகப் பாடினார். இந்தப் பாட்டைப் பாடி, அச்சத்தைப் போக்கி உய்வு பெறவேண்டும் என்பதே அவர் திருவுள்ளம். அச்சத்தைப் போக்கும் வழி அச்சம் என்பது மனத்தில் உதிப்பது. நெளிந்து போகின்றவற்றை எல்லாம் பார்த்து, 'பாம்பு பாம்பு' என அலறுகின்ற மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பாம்புப் பிடாரன் அந்தப் பாம்போடு விளையாடுகிறான். பாம்பு கடித்தால் விஷம் அவன் உடம்பில் ஏறும். ஆறு அறிவு படைத்த மனிதன் கிடக்கட்டும். ஒரு சின்னக் கீரிப்பிள்ளை. பாம்பு கடித்தால் உடனே செத்துப்போகும். ஆனால் அது பாம்போடு விளையாடுகிறதே. பாம்பைக் கண்டு அது நடுங்குவது இல்லையே! காரணம் பாம்பின் நஞ்சு அதனிடத்தில் பலிக்காது என்பது அல்ல. நம்மைப் போல அது பயந்து நடுங்கு வது இல்லை. பாம்போடு சண்டைபோடுகிறது. எந்த இடத்தில் பற்றினால் பாம்பால் தன்னைக் கடிக்க முடியாதோ அந்த இடத்தில் பற்றிவிடுகிறது. பாம்பைக் கண்டவுடனே நம் உள்ளங் களில் ஏற்படுகிற கிலி அந்தச் சிறிய பிராணிக்குக் கிடையாது. அதனாலேதான் அது பாம்பைப் பிடித்துப் பிடித்து விளையாடு கிறது. நமக்குப் பாம்பு கால்வாசி, பயம் முக்கால்வாசியாக இருக்கின்றன. எமனைப் பற்றி நினைக்குந்தோறும் உள்ளத்தில் பயந்து பயந்து கிலி பிடித்துச் சாகின்ற நாம், "எமன் என்னை ஒன்றும் செய்ய முடியாது; எமன் என் அருகில் வந்தாலும் அவனைக் கொன்று வீழ்த்துவேன்' என்று சொல்லிச் சொல்லி உள்ளத்தில் முறுக்கு ஏற்றித் தைரியத்தைப் பெற வேண்டும் என்ற கருணை யினால் இந்தப் பாட்டின் வாயிலாகச் சிறந்த உபதேசத்தைச் செய்கிறார் அருணகிரியார். 213