பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மெஸ்மெரிஸம் 'மெஸ்மெரிஸம் என்ற வித்தையை நீங்கள் அறிவீர்கள். மருந்து கொடுப்பதில்லை. மென்மையான உள்ளம் படைத்தவனை அப்படியே அமர வைத்து, “நீ தூங்கப் போகிறாய். இதோ நீ துங்கப் போகிறாய்!” என்று வித்தை வல்லவன் சொல்லிக் கொண்டே இருக்கிறான். "நான் தூங்க மாட்டேன்' என இவன் நினைத்துக் கொண்டிருந்தாலும் அவன் கூறுகின்ற சொற்கள் காதுவழியாகப் புகுந்து, கல்லாய் இருக்கிற உள்ளத்தைத் தாக்கி, 'நான் துரங்கிவிடுவேன் போலிருக்கிறதே என நினைக்கச் செய்து, கொட்டாவி விடப்பண்ணி, "நான் தூங்கி விடுவேன்' என்ற முடிவையும் ஏற்படுத்தி விடுகிறது. தூங்கப் போகிறேன் என்று மனத்தில் தோற்றிய எண்ணம் அவனைத் துரங்கவே பண்ணிவிடு கிறது. நல்ல ஆற்றல் உடையவனும் தூங்கிப் போய்விடுகிறான். விஞ்ஞான அறிவிலே தலைசிறந்து விளங்கும் மேல்நாட்டார் செய்கின்ற வித்தை இது. இந்த வித்தையை நாம் பார்க்கிறோம். இதைப் போலவே ஒருவன், 'நான் செத்துப் போவேன்' என்று உள்ளத்தில் எண்ணி எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கிறான்; கடைசியில் செத்தே போகிறான். 'நான் சாக மாட்டேன்; எமனைக் கண்டு அஞ்சமாட்டேன்' என்று நினைக்கிற ஆற்றலை உள்ளத்தில் பெற்றோமானால் அந்த நினைப்பினால் உள்ளத்தில் முறுக்கு ஏற, இறைவன் திருவருளைப் பற்றிக் கொண்டு மரண மில்லாப் பெருவாழ்வைப் பெற முடியும். உண்மையில் எத்தனையோ தாய்மார்கள், காய்ச்சலால் அவதிப்படுகின்ற தங்கள் குழந்தை களுக்குத் தெய்வத்தை நம்பி விபூதியைப் பூசிவிட்டு கந்தர் அலங்காரமோ, திருமுருகாற்றுப்படையோ, கந்தர் அநுபூதியோ பாராயணம் செய்து கொண்டிருக்கவில்லையா? நெஞ்சில் உறுதி யிருக்குமானால் நிச்சயமாக நோய் தீர்ந்துவிடும். நினைப்பில் வலிமை மேல்நாட்டினரிற் சிலர் 'ஆட்டோ ஸஜ்ஜஷன் (Auto Suggestion) என்ற இம்முறைப்படி பல வியாதிகளைக் குணமாக்கி வருகிறார்கள். நோய் உடைய ஒருவன், "எனக்கு நோய் இல்லை; எனக்கு நோய் போய்விட்டது” என்று சொல்லிக் கொண்டே 214