பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன். தாக்கி அவனை வெட்டி வீழ்த்தி விடுவாராம். அவர் பெற்ற ஆயுதம் எமன் நிதானிக்கிறான். இந்தப் பேர்வழி நம் கையில் இருக்கிற படைகளையும் தெரிந்து கொண்டிருக்கிறான். நமது பலத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறான். இவன் கையிலோ எந்த ஆயுதமும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் தைரியத் தினால் இவன் இவ்வாறு பேசுகிறான்? என்று யோசிக்கிறான். அவனைப் பார்த்து, "என்னிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என்றா யோசிக்கிறாய்? சொல்கிறேன் கேள்' என்று கூறுகிறார். செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா! செந்தில் வேலவன் “வேலை ஆயுதமாகப் படைத்த ஆண்டவனுடைய சேவகன் நான் என்று தொடங்குகிறார். வெல் என்பதிலிருந்து வேல் என்பது பிறந்தது. வெல்வதற்கு உரியது வேல். மற்றப் படைகள் எல்லாவற்றினும் சிறந்தது அது. சாமானிய வேலுக்கே அந்தப் பெருமை இருக்கிறது. எம்பெருமான் பிடித்திருப்பது ஞானவேல். அதனைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெருமான் செந்திலில் இருக்கிறான். செந்தில் வேலனுக்குத் தொண்டர் அருணகிரிநாதர். செந்தி என்ற சொல் செந்தில் ஆயிற்று என்பர். ஜயந்தி என்ற சொல்லே செந்தி ஆயிற்றாம். ஜயந்தி என்பது வெற்றியைக் கொண்டாடிய இடம் என்ற பொருளை உடையது. சூரனோடு போராட இந்த இடத்திலிருந்து முருகன் புறப்பட்டான். சென்று சூரபன்மனை அடக்கி ஒடுக்கி வெற்றி பெற்றுத் தேவர்களுக்கு இன்பம் தந்தான். அந்த வெற்றிக் கொண்டாட்டம், விஜயாபி ஷேகம் நடந்தது இந்த இடத்தில்தான். தேவர்களும் மற்றவர்களும் கூடி இங்கேதான் அவனது வெற்றியைக் கொண்டாடி வெற்றித் 21.8