பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 சொல்கிறார். சென்ற பாட்டிலே அவன் இடையி லுள்ள மணி யின் ஒசையை எடுத்துக் காட்டினார். இந்தப் பாட்டிலே அவன் கை ஒசையை எடுத்துக் காட்டுகிறார். குழந்தை சற்றே வளர்ந்து உட்காரத் தெரிந்து கொண்ட பிறகே இரண்டு கைகளையும் ஒசை எழும்ப்டி தட்ட இயலும். பிறந்த குழந்தைக்குக் கை விரிவது இல்லை. பற்றிக் கொண்டு இருக்கும். முருகக் குழந்தை சற்று வளர்ந்துவிட்டான். மூடி இருக்கிற கையை விரித்துத் தட்டி, சப்பாணி கொட்டி விளையாடுகிறான். பிரார்த்தனை இந்த விளையாட்டைச் சொல்வதற்கு முன்னே அருண கிரியார் பிரார்த்தனை செய்து கொள்கிறார்; சப்பாணி கொட்டும் குழந்தையைப் பார்த்துத்தான். மற்றக் குழந்தைகள் இரண்டு கை களினாலே சப்பாணி கொட்டும். அவன் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் உடையவன். ஆகையால் தன்னுடைய பன்னிரண்டு திருக்கரங்களினாலும் சப்பாணி கொட்டி விளையாடுகிறான். அவனைப் பார்த்து வேண்டுகிறார். குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்புஅடைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! பொம்மலாட்டம் ஒரு பெரிய மேடை அதில் திரை விட்டிருக்கிறார்கள். பொம்மலாட்டம் நடக்கிறது. பழங் காலத்திலிருந்து வரும் கலை பொம்மலாட்டம். மேடைகளில் பொம்மைகளே வந்து ஆடும். கையைத் தட்டும். ஆணும் பெண்ணும் கையைக் கோத்துக் கொண்டு நடனம் ஆடும். திரைக்கு முன்னாலே மேடையில் வந்து பொம்மைகள் ஆடும். அந்தப் பொம்மைகள் இயங்குவதற்குக் காரணமாய் இருப்பவன் திரைக்குப் பின்னால் இருப்பான். பொம்மையின் கை, கால், தலை ஆகியவை ஆட வேண்டுமானால் அதை ஆட்டுவிக்கின்றவனுடைய கை, கால், தலை திரைக்குப் பின்னால் ஆடும். பொம்மைகளின் ஆட்டம் அத்தனையும் பின்னால் இருக்கிற மனிதனுடைய ஆட்டத்தை ஒத்தே நிகழும். அவன் ஆடாவிட்டால் அந்தப் பொம்மைகள் ஆட மாட்டா. 12