பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்க நேரமாகாது. கல்யாண ஏற்பாடுகளைச் செய்ய நேரமாகுமே தவிர, தாலி கட்ட நேரமாகாது. பாயசம் வைக்க நேரமாகுமே தவிர, ஏலக்காய் பொடி பண்ணிப் போட நேரம் ஆகாது. அவ்வாறு இறைவன் அருளைப் பெறுவதற்கு வேண்டிய எல்லா விதமான ஏற்பாடு களையும் முற்பிறப்பிலேயே செய்து கொண்டுவிட்டவர்கள் இந்தப் பிறப்பில் மிக எளிதில் அவ்வருளைப் பெற்றுவிடுகிறார்கள். “நரைவரும் என்று எண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்" என்பது நாலடி நல்ல அறிவுடையவர்கள் குழந்தைப் பிராயத்திலே உள்ளத் துறவைப் பெற்றுவிடுகிறார்களாம். ஞானசம்பந்தப் பெருமான் குழந்தைப் பருவத்திலேயே ஞானம் பெற்றார். மிகப் பெரியதாக உயர்ந்திருக்கிற கட்டிடத்தைப் பார்க்கின்ற குழந்தைக்குப் பூமிக்கு அடியில் அஸ்திவாரம் எத்தனை ஆழத்தில் போடப்பட்டு இருக்கிறது எனத் தெரியுமா? அவ்வளவு பெரிய கட்டிடம் அஸ்திவாரம் இல்லாமல் எழும்பாது என்பது நமக்குத் தெரியும். அந்த அஸ்திவாரம் மறைந்திருக்கும். கட்டிடம் மேலே தெரியும். விட்டகுறை தொட்டகுறையுடைய யோகப் பிரஷ்டர்கள் முந்திய பிறப்பில் பலமான அஸ்திவாரம் போட்டுக் கொண்டவர்கள்; அவர்களுக்கு இந்தப் பிறப்பில் கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். இறைவனைக் காணும் நிலை வந்து விடுகிறது. எந்த நிலையில் இருப்பவர்களானாலும் உறவு, உணர்வு, செய்கையாகிய மூன்றும் வேண்டும். பக்தி, ஞானம், கர்மம் என்ற மூன்றும் ஒன்றனோடு ஒன்று தொடர்பு உடையவை. அந்த மூன்றும் இணைந்த முயற்சியிலேதான் இறைவனைக் காண முடியும். பக்தி இல்லாமல் கர்மம், ஞானம் இருந்து பயனில்லை. கர்மம், ஞானம் இல்லாமல் வெறும் பக்தி இருந்தால் பயனில்லை. எம்பெருமானிடத்தில் பக்தி இல்லாமல், தாருகாவனத்து ரிஷிகள் கர்மாக்களைச் செய்தனர். அவர்கள் நல்ல பயனைப் பெற்றார் களா? இல்லை. இறைவனுடைய பெருமையை உணரும் ஞானமும் அவர்களுக்கு இல்லாமற்போயிற்று. அவனைப் பகைவனாக 224