பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! எண்ணித் தீயவேள்வி செய்து அதில் எழுந்த பாம்புகளை ஆண்டவன் மேல் ஏவிவிட்டார்கள். இறைவன் அந்தப் பாம்பு களையே ஆபரணமாகப் பூண்டு, அவர்கள் தருக்கை அழித்தான். மூட பக்தி என்று சொல்கிறோமே, அது ஞானம் இல்லாத பக்தி. பக்தரைப் போல ஆடிப் பாடுவார்கள். ஆனால் பயன் விளை யாது. தன்னுடைய உடம்பையே அறுத்து அறுத்து அவிசாகப் போட்டான் சூரபன்மன்; அவனுக்குப் பக்தியோ ஞானமோ இல்லை. அவனைப் போலக் கடுந்தவம் செய்ய இயலாது; ஆனால் அந்தத் தவம் நல்ல பயனை உண்டாக்கவில்லை. அதன் பயனாக உலகத்திற்குத் தீங்கு விளைந்தது; முடிவில் அவனுக்கும் தீங்கு விளைந்தது. ஞான சாஸ்திரம் படிக்கிறவர்களிற் சிலர், 'இறைவனிடத்தில் பக்தி செய்து, தொண்டு செய்து பயன் என்ன? அகம் பிரம்மாஸ்மி என்று பாவனை செய்தால் போதும்' என்பார்கள். ஞான நூல் களைப் படித்த மாத்திரத்தில் ஞானமே வந்துவிட்டதாக எண்ணிக் கொள்வார்கள். நூலறிவு தர்க்கத்துக்கு உதவுமேயன்றி அநுபவத் துக்குப் பயன்படாது. ஆண்டவனிடத்தில் பக்தி செய்து, தொண்டு செய்தால் ஞானசித்தி பெறலாம். "ஞானம் அடைந்துவிட்ட பிறகு பக்தி வேண்டியதில்லை' என்று சிலர் சொல்வார்கள். பெரிய மாளிகையின் உள்ளே நுழைவதற்கு உதவிய வாயிற்படியை யாராவது உள்ளே நுழைந்த பின் அடைத்துவிடுவார்களா? எந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தார்களோ அந்த வாசலை நன்றாக அலங்கரித்து வைப்பார்கள். தங்களுக்கு ஞானம் உண்டாவதற்குக் காரணமாய் இருந்த மூர்த்தியை அவரவர்கள் கடைசிவரையிலும் வைத்துப் பூசித்துப் பக்தி செய்வார்கள். குரு பரம்பரையில் முதன்மை ஸ்தானம் வகிக்கின்ற சமயாசாரியர்களைப் பார்க்கலாம். சங்கரர் வழிவந்த ஆசாரியார்கள் அம்பிகையைப் பூசிக்கிறார்கள். சைவ மடங்களிலும் பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. மற்றச் சமய ஆசாரியர்களும் ஆராதனையை விடவில்லை. மகா ஞானி யாகிய சதாசிவப் பிரம்மேந்திரர் கிருஷ்ணனையும் ராமனையும் உருகி உருகிப் பாடியிருக்கிறார். சில காலத்துக்கு முன் வாழ்ந் திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையின் பூசையிலே பேரானந்தம் பெற்றார். ஆகவே, 'எனக்கு ஞானம் வந்து 225