பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் உயிர் உடம்பை விட்டுப் போனால் மரணம் அடைந்தார் என்று சொல்வது வழக்கம். ஆனால் இந்த உடம்பு இருக்கும் போதே சாவது ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில், கோழை பல முறைகள் மரிக்கிறான்' என்று சொல்வது வழக்கம். தனக்கு வருகிற துன்பத்துக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்று உறுதியோடு வாழ வகை தெரியாதவன் பயத்தினாலேயே ஒவ்வொரு கணமும் செத்துப் போகிறானாம். 'அவன் பயந்து பயந்து சாகிறான்' என்று நாம்கூடச் சொல்கிறோம். பயமுள்ளவனைச் செத்துப் போனவனுக்குச் சமானமாகச் சொல்வதற்குரிய காரணத்தை ஆராய வேண்டும். வாழாத வாழ்வு உடம்பு படைத்த அளவிலே ஒருவனை வாழ்கிறான் என்று சொல்ல இயலாது. பக்கவாதம் வந்தால் ஒருவனுக்குக் கை கால் சுவாதீனம் இல்லாமல் போய் விடுகின்றன. அவன் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தாலும் சுகமாக வாழ்ந்தான் என்று சொல்வது பொருந்தாது. 'முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை; முப்பது ஆண்டு கெட்டவனும் இல்லை' என்று சொல்வார்கள். இங்கே வாழ்வது என்பது உயிரோடு இருப்பது என்ற பொருளுடையது அன்று. எல்லா அங்கங்களும் குறைவறப் பெற்ற பயனை நன்றாக அநுபவித்தால் வாழ்வதாகச் சொல்லலாம். சிலருடைய உடம்பு வெறும் பிண்டமாக இருக்கும். கண்ணைத் திறக்கும், பேசாது. அந்த உடம்பில் உயிர் இருந்தாலும் வாழ் கிறேன் என்று சொல்லும் தகுதி அதற்கு இல்லை. உடம்பை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ, அந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. கை உடையவன் அந்தக் கையால் அடிக்கடி பிறரை அடித்து வேலை செய்தால் போதாது. கை செய்ய வேண்டிய உத்தமமான