பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் ஆகவே, உறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற ஒருவன் எப்படி எப்படி அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறானோ அவ்வாறே நல்லன பொல்லாதன அமைகின்றன. 'ஒருவன் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வைரம் வாங்கி னான். அதுவே அவனுக்கு யமன் ஆக முடிந்தது' என்று கேள்வி யுறுகிறோம். காதில் போட்டுக் கொள்வதை வாயில் போட்டுக் கொண்டால் சிறந்த ஆபரணமாகத் திகழ வேண்டிய வைரம் நஞ்சாக மாறிவிடுகிறது. இரண்டிடத்திலும் வைரம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதை எப்படி உபயோகித்துக் கொள்ள வேண்டுமோ அப்படி உபயோகித்துக் கொள்ளாவிட்டால், அது அவனையே கொல்லும் நஞ்சாகிவிடுகிறது. உறுப்புக்களும் உத்தமமான காரியங்களைச் செய்தால்தான் வாழ்கின்றன என்று சொல்ல உரியனவாகும். கை அறச் செயல் களைச் செய்தால், அது வாழ்ந்தது என்று சொல்லலாம். அப்படியே வாய் உத்தமமான சொற்களைப் பேசினால், அது வாழ்ந்தது என்று சொல்லலாம். அரசனும் மந்திரியும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் சேர்ந்த உடம்பு ஒரு கோட்டையைப் போன்றது. உயிர் என்ற அரசன் வாழ்வதற்காக இந்த உடம்பாகிய கோட்டையை வகுத்துத் தந்திருக்கிறான் ஆண்டவன். முன்னாலே செய்திருக்கும் வினைப்பயனை அநுபவிக்க உடம்பு வந்துவிடுகிறது. இந்த அற்புதக் கோட்டைக்கு ஒன்பது வாசலை வைத்து ஆண்டவன் அனுப்பியிருக்கிறான். இந்தக் கோட்டையிலிருந்து ஆட்சி செய்யும் ஆத்மா என்னும் அரசனுக்கு இரண்டு மந்திரிகள் முக்கியமானவர்கள். ஒருவன் நல்ல மந்திரி; மற்றொருவன் கெட்ட மந்திரி. மனம் என்பதுதான் கெட்ட மந்திரி. புத்தி என்பது நல்ல மந்திரி. அரசன் எவ்வளவு திறமையுடையவனாயினும் தானே ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. மதி மந்திரிகள் மூலந்தான் செய்வான். மந்திரி களின் அறிவைத் தன் அறிவுக்குத் துணையாகக் கொண்டவன் நல்ல அரசன். மந்திரியின் அறிவையே தன் அறிவாகக் கொண் டான் என்றால் சங்கடம் உண்டாகும். சிறந்த அரசன் தன் அறிவாற்றலால் யோசனை செய்து மந்திரிகளோடும் ஆராய்ந்து 235