பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் "ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியும் அல்ல பல" என்பது வள்ளுவர் வாய்மொழி. வீண் ஆசைப்பட்டு, செயலிலே ஈடுபடாத மக்கள் தமக்குக் கிடைத்த குறுகிய வாழ்க்கையில்கூட நன்றாக வாழ்வதில்லை. "நமக்குக் கிடைத்திருக்கும் இந்த உடம்பு சில வாழ் நாளையும் பல பிணிகளையும் உடையது. பல குறைபாடுகளைப் பெற்றது. விரிந்து கொண்டே போகின்ற ஆசைகளின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம் ஆயுளின் அளவு மிக மிகக் குறைவு. அதற்குள்ளேயே நீ செய்ய நினைக்கிற காரியங்களின் ஒரு பகுதியையாவது செய்துவிட வேண்டும். மேலும் மேலும் ஆசைப்படாமல் கொஞ்ச மாக ஆசைப்பட்டு உடனே அதைச் செய்துவிடு. உள்ளே போய் வருகின்ற காற்று எந்த நிமிஷம் சுழல் மாறிப் போய் விடுமோ” என ஞானிகள் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது நமக்குத் தெரியாதது அன்று. நமக்குத் தெரியாததை எவ்வளவு பேர் சொன்னாலும் விளங்காது. நமக்குத் தெரிந்ததையே அவர்கள் நினைப்பூட்டுகிறார்கள். சாப்பிட வேண்டுமென்பது தெரிந்தும் மறந்து போய் உட்கார்ந்திருக்கிற தன் குழந்தையிடம் தாய், 'அப்பா, நேரமாகிவிட்டது; குளித்துவிட்டுச் சாப்பிட வா' என் நினைப்பூட்டுவது போல அவர்கள் நமக்கு மரணம் உண்டு என்பதை நினைப்பூட்டுகிறார்கள். பற்றுவதே பற்றுதல் நம் மனம் பற்றுவதைப் பற்றிக் கொண்டே இருக்கும். சாதாரண மாக ஒருவன் இந்தப் பக்கமாகப் போவான். சொற்பொழிவு நடக்கிறதென்று தெரிந்து உள்ளே வந்து உட்கார்ந்தால் சொற் பொழிவைக் கேட்கும்போதே அவன் மனம் தினமும் இங்கே வந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டுமென்று விரும்பும். ஆனால் சினிமாக் கொட்டகைப் பக்கம் போனால் தினமும் சினிமாவுக்குப் போக வேண்டுமென்று அதைப் பற்றிக் கொள்ளும். இப்படிப் பற்றிக் கொண்டதையே பற்றுவது மனத்தின் சுபாவம். பற்றிக் கொள்வது நல்லதாக இருந்தால் நன்மை விளையும். தீயதாய் இருந்தால் தீமை உண்டாகும். படிக்கிற குழந்தை விஷமம் செய்து கொண்டே இருந்தால் கெட்டுவிடும் என்பதை 239