பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உணர்ந்து, 'படியடா, படியடா’ என்று தாய் பிள்ளைக்கு நினைப்பூட்டுகிறாள். தெய்வத்தை நினைந்து நினைந்து நெக்கு விட்டு உருகி வாழ வேண்டிய மக்கள் இறைவனை மறந்து செயல் புரிந்து வருவதைக் கண்டு அவர்களுக்கு இறைவனது நினைப்பு ஊட்டி, "நீங்கள் விரைவில் இறந்து போய்விடுவீர் களே; உங்கள் வாழ்க்கைக் காலம் மிகக் குறைந்தது. இந்தக் குறுகிய காலத்தில் இறைவனது அருளைப் பெற வழி தேட வேண்டும்' என்று நினைப்பூட்டுகிறார்கள் பெரியவர்கள். காலத்தைக் கொல்லுதல் நமக்குக் கிடைத்த காலத்தைத் தக்க வழியில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். காலத்தை நாம் கொல்ல வேண்டும், இல்லாவிட்டால் காலம் நம்மைக் கொன்றுவிடும்' என்பார்கள். ஒர் அரசாங்க வேலைக்காரர் வேலையிலிருந்து ஒய்வு பெறு கிறார். ஆனால் ஒய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அவர் இளைத்துப் போவதையும், நோய்வாய்ப்படுவதையும், பின்பு மரிப்பதையும் கண்டிருக்கிறோம். காரணம் என்ன? மிகவும் சுறு சுறுப்பாகப் பத்துமணி முதல் ஐந்துமணி வரையில் காரியாலயத் தில் உழைத்துப் பழகிப்போன அவருக்கு வீட்டில் அதே நேரத்தில் வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் தவிக்கிறார். அவர் உடம்பு வாழ்வதில்லை. அதற்கு வேலை கொடுக்க வழியில்லை. காலத்தைக் கொல்ல முடியாமல் தவிக்கிறார். காலன் அவரைக் கொன்று விடுகிறான். காலம் போவது தெரியாமல் இருந்தார், நாள் முழுவதும் உழைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது. இப்போது வேலை இல்லை. 'பொழுது போகவில்லையே' என்று ஏங்க ஆரம்பித்துவிடுகிறார். காலத்தைக் கொல்வதற்கு அவரிடத்தில் வேலை இல்லை. ஆரம்ப முதற்கொண்டே, 'நின்றும் இருந்தும் கிடந்தும் நினைமின்கள், என்றும் சிவன்தாள் இணை' என்றபடி இறைவனுக்குத் தொண்டு என்ற வேலையை ஒழிவு ஏற்படும் நேரங்களிலே செய்து பழகியிருந்தாரானால், பூர்ண ஓய்வு பெற்ற காலத்தில் அந்த வேலையை முழுநேரமும் செய்வதற்கு அவரால் முடியும். வேலை இல்லையே என்று ஏங்க வேண்டிய அவசியம் இராது. வேலை செய்து கொண்டே இருந்த உடம்புக்கு வேலை இல்லை என்றால் அது வாடிவிடுகிறது. உள்ளம் 240