பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மயில் வேகமாகப் போவதனாலே அவர்களுக்கு அநுகூலம் செய்வதற்காக அதில் செல்கிறான். 'எந்த நேரத்திலும் அவன் நீலச் சிகண்டியில் வருவான். எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்' என்று எந்த நேரத் திலும் என்ற சொற்களை முன்னும்பின்னும் கூட்டிக் கொள்ள வேண்டும். இதை இலக்கணத்தில் இடைநிலைத் தீவகம் என்பர். கோலக் குறத்தி “முருகப் பெருமானுக்கு இரண்டு மனைவிகள் உண்டே ஒருத்தி தேவயானை, மற்றொருத்தி வள்ளி, தேவயானையோடு அவன் வரமாட்டானா?' எனச் சிலருக்குச் சந்தேகம் தோன்ற லாம். பக்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நிலையில் இருப்பவள் வள்ளி. நம்மைப்போல உலகத்தில் பிறந்து வாழ்ந்து முருகன் அருளைப் பெற்றவள். நீங்களும் அவன் அருளைப் பெறலாம் என்று தன் தோற்றத்தினால் புலப்படுத்துகிறாள். அவளைக் கோலக் குறத்தி என்கிறார். நாம் சரீர சம்பந்தமான புற அழகைப் பெரிதாக மதிக்கிறோம். ஆண்டவன் புற அழகை நினைக்கிறது இல்லை. குண செளந்தரியத்தைப் பெரியதாக நினைக்கிறான். வள்ளியெம்பெருமாட்டியிடம் குண செளந்தரி யத்தை அவன் கண்டான். தன் நாயகனாக முருகனையே அவள் வரித்துவிட்டாள். அவள் மன உறுதியைச் சோதிப்பவனைப் போல வேடனாக வந்தான். கிழவனாக வந்தான். அந்த உருவங்களை எல்லாம் அவள் ஏறெடுத்தும் பார்த்தாளா? 'போ, என் அருகில் வராதே' என விரட்டி அடித்தாள். அவள் கோபங் கூட அவனுக்கு இன்பமாக இருந்தது. 'உலகத்திலுள்ள மக்கள் நம்மை நாடாமல் எந்த எந்தப் பொருள்களையோ விரும்பி ஓடிக் கொண்டிருக்கிறார்களே; இந்த வள்ளி நம்மைத் தவிர வேறு யாரையும் பார்க்கக்கூட அல்லவா மறுக்கிறாள்? நம்பால் இவள் கொண்ட உள்ளக் காதல்தான் என்னே!” என வியந்து அவளது அன்பாகிய குண செளந்தரியத்தைக் கண்டான். அவள் எம்பெருமானை அடையாத வரையிலும் குறத்தியாக இருந்தாள். அவனைப் பிரிந்து இருந்தபொழுது வனவிலங்கு களுடனே அவள் இருந்தாள். ஆலோலம் பாடிக் கொண்டு வாழ்ந் தாள். ஆனால் எம்பெருமானை அடைந்த பிறகு, நீலச் சிகண்டி 244