பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் யின் மேலே எம்பெருமானின் அருகிலே கோலக் குறத்தியாக இருக்கிறாள். எம்பெருமான், எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன் வருவான்." எப்போதும் வருவான் காலத்தை வெல்லவேண்டியவர்களாகிய நாம், எந்தப் பொழு தில் பூசை செய்யவேண்டும்? எப்போது அவனை நினைத்தால் வருவான்? சில பணக்காரர்களைப் போய்ப் பார்க்க வேண்டுமென் றால், 'இந்த வேளையில் போகவேண்டும்; அப்போதுதான் சிரித்த முகமாக இருப்பார்; மற்ற நேரங்களில் போனால் வள் என்று விழுவார்' எனச் சொல்வது இல்லையா? முருகனுக்கு அப்படி வரையறையாக இந்தக் காலந்தான் அடியார்களுக்கு அருள் புரியும் காலம் என்பது இல்லை. அவன் எப்போதும் வருவான். அவனுக்கு அதுதான் வேலை. சிறந்த வள்ளல்களாக இருந்தவர்களுக்கே இன்ன நேரத்தில் தான் கொடை வழங்குவார்கள் என்ற வரையறை இல்லை. மலையமான் திருமுடிக் காரி என்பவன் ஒரு வள்ளல். அவனைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் இருக்கின்றன. அவனிடம் பரிசு பெறப் போகிறவர்கள் நல்ல நாள் பார்த்துச் சகுனம் பார்த்துச் சொல்லவேண்டும் என்பதில்லையாம். நல்லநாள் இல்லாவிட்டா லும் சகுனம் ஆகாவிட்டாலும் தம் குறையை எடுத்துச் சொல்லும் ஆற்றல் இராவிட்டாலும் போகிறவர்கள் வெறும் கையோடு வரமாட்டார்கள். அவன் கொடைக்கு நாள் இல்லை; முகூர்த்தம் இல்லை; எப்போதும் கொடுப்பவன். “நாளன்று போகிப் புள் இடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர், நெறிகொளப் பாடான்று இரங்கும் அருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே."

  • நல்ல நாளல்லாத நாளில் போய்ச் சகுனம் இடையிலே தடுக்கச் சந்தர்ப்பம் அல்லாத செவ்வியிற் புகுந்து ஆற்றலில்லாத வகையில் சொன்னாலும், ஒழுங்காக ஒலி நிறைந்து முழங்கும் அருவியையும் பெருமையையும் உடைய மலையைப் பெற்ற காரியைப் பாடிய புலவர் வெறுங் கையோடு வரமாட்டார்.

245