பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 முருகன் வள்ளல்களிற் பெரிய வள்ளல். அவனுக்கு இன்ன காலம் என்ற வரையறை இல்லை. அவனை எப்பொழுது வேண்டுமானாலும் திருப்புகழ் பாடித் துதிக்கலாம். எதற்கும் ஒரு காலம் குறிப்பிட்டு வேலை செய்கின்ற நாம், ஆண்டவனைத் துதிக்கவும் ஒரு குறிப்பிட்ட காலம் வேண்டுமே எனக் கலங்க வேண்டாம். எப்போது கூப்பிட்டாலும் அவன் வருவான். எந்த நேரத்திலும் என்பதோடு எந்த இடத்திலும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'எந்த இடத்திலிருந்து நீ கூப்பிட்டாலும் அவன் வருவான்' என்று கொள்ளலாம். நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான். நீல வண்ணம் பொருந்திய மயிலின்மேல் ஏறும் பிரான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான். யார் அழைத்தாலும் வருவான். அவன் அருள் எல்லாக் காலத்திலும், எந்த இடத்திலும் கிடைப்பது மாத்திரம் அல்ல. எந்தப் பக்குவத்தில் இருந்தாலும் அவன் அருள் செய்வான். 'இறைவன் அருளைப் பெறுவதற்கு நான் எந்த விதமான பூசையையும் செய்யவில்லையே! நான் இவ்வுலகில் மிகப் பாவியாகப் பல தீய செயல்களை அல்லவா செய்து கொண்டிருக் கிறேன்? எனக்கு அவன் அருள் எப்படிக் கிடைக்கும்?' எனப் பயப்படவேண்டியதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் எந்தக் கோலத்தில் இருந்தாலும், அவனை அழைத்தால் போதும்; அவன் ஒடி வந்து நமக்கு அருள் செய்யக் காத்திருக்கிறான். குறமகளோடு வருவது இதைப் புலப்படுத்துகிறது. வள்ளி இருந்த நிலை என்ன? அவள் கோலம் என்ன? அவள் பிறந்து வாழ்ந்த குடி எப்படிப்பட்டது? அவை எல்லாம் நமக்குத் தெரியும். வேடர்களின் மத்தியிலே, தினைக் கொல்லையைக் காத்துக் கொண்டு, குற மகளாக வள்ளி இருந்தாலும், அவள் அவனை நினைந்து கூப்பிட்டாள். அவள் குலத்தையும், கோலத்தையும், அவள் வளர்ந்து கொண்டிருந்த நிலையையும் கண்டு எம்பெருமான் வராமல் இருக்கவில்லை. ஒடிப்போய் அவளை ஆட்கொண்டான். 'உன்னைக் காட்டிலும் தாழ்வான சூழலில் இருந்தவள் வள்ளி. அவளை ஆட்கொண்ட எம் 246