பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் சிற்றுண்டியை உண்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறான். "பொழுது போகவில்லையே. பொழுதுபோகவில்லையே! என்று உள்ளுக்கும் வெளிக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். இப்படிக் காலத்தை நினைந்து, காலத்தைக் கொல்வதற்கு வழி தெரியாமல் திணறி மனம் சலித்துப் போகின்றவர்களைக் காலன் கொண்டு போய் விடுகிறான். காலனை வெல்லக் காலத்தை வென்று வாழ்பவர் கள் யார்? குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத்தெளிந்து அறியும் சிவயோகிகள். இவர்களே காலத்தை வென்றிருப்பவர்கள்; காலனையும் வெல்கிறவர்கள். ரெயிலில் ஏறிப் படுத்த பிரயாணி ஒருவர் இருநூறு மைல் தூரத்தை எவ்விதச் சிரமமும் இன்றி, கண்களில் எரிச்சல் இல்லாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டே கடந்து விடுகிறார். வாழ்க்கையிலே குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிந்த சிவயோகிகள் இறைவன் அருள் நினைவிலே தூங்கிக் காலத்தைச் சுகமாக வென்று எவ்விதமான பயமும் துன்பமும் இன்றிக் காலனையே வென்றுவிடுகிறார்கள். யோகம் யோகம் என்பது மனத்தை நிறுத்துதல்; சித்த விருத்தியைத் தடுத்தல். 'யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோத:' என்பது பதஞ்சலி யோகசூத்திரம். வேகமாக ஓடுகின்ற உள்ளத்தை இறைவன் நாமத்தைச் சொல்லிச் சொல்லி நிறுத்தினால் அதுவே யோகம். குருநாதன் சொன்ன சீலத்தைக் கடைப்பிடித்து, மனத்தைச் சுத்தமாக வைத்து, ஆண்டவன் அருள் நெறியில் ஒழுக வேண்டும். அந்த நெறிப்படி செல்கின்ற வர்கள் சித்த விருத்தியை ஒழித்துக் காலத்தை வெல்வார்கள். வெறும் கர்மிகள் மரிப்பார் வெறும் கர்மிகளே இறைவனை நினைந்து செய்கின்ற கர்மமே யோகம் ஆகிவிடு கிறது. கர்மங்கள் நிஷ்காம்ய கர்மம், காம்ய கர்மம் என இரு வகைப்படும். எவன் கர்மத்தின் விளைவில் கருத்தை வைத்துச் 249