பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 செய்கின்றானோ அவனுக்குப் பிறவி உண்டு. பிறவியினால் துன்பம் உண்டு. பலனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் எது வந்தாலும் வரட்டும் என்று இறைவன் மேலே பாரத்தைப் போட்டு ஒழுக்க நெறியிலே நின்று எவன் தன் கடமைகளைச் செய்கிறானோ அவனுக்குப் பிறவி இல்லை; துன்பமும் இல்லை. அவன் செய்வது வெறும் கர்மம் அல்ல; யோகமாகிய கர்மம். அவன் கர்மயோகி. இறைவனை நினைக்காமல் தான் செய்கின்ற காரியத்திற்கு உடனே கூலியை எண்ணுகிறவன் செய்வது வெறும் கர்மம். அவனே வெறும் கர்மி. இறைவன்பால் பக்தி இல்லாமல் செய்பவை வெறும் கர்மங்கள். ஆண்டவன் நெறியில் எந்த விதமான கூலியையும் எதிர் பார்க்காமல் செய்கின்ற கர்மங்கள் எல்லாம் யோகமாக மாறிவிடுகின்றன. அத்தகையவன் காலத்தை மறந்து இறைவனது திருவருள் விலாசத்திலே தூங்குகிறான். இறைவனை நினைக்காமல் தான் செய்கின்ற கர்மங்களின் பயனையே நினைந்து வாழ்பவன் காலத்தைக் கொல்ல மாட்டாமல் தவிக்கிறான். அவனைக் காலம் பயமுறுத்த, பின்னர்க் காலன் வந்து பயமுறுத்துகிறான். வாழும்போதே அவன் செத்துப் போவான். வாழ்ந்தும் வாழாது இருக்கின்றவன் அவன். நடமாடும் பிணமாக வெறும் கர்மியாக இருக்கிறான். இத்தகைய வெறும் கர்மிகள் மரிப்பார்கள். குருநாதனிடம் பக்தியின்றி அவன் சொன்ன சீலம் இன்னதென்று தெரியாமல் தம் மனம் போன போக்கிலேயே செய்பவர்களையும் வெறும் கர்மிகள் என்னலாம். அவர்களும் பயன் கருதிச் செயல் புரிவோரும் ஒரே வகையைச் சார்ந்தவர்களே. மனிதர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும் இறைவனை நினைந்து வாழாதவர்கள் அசுரர்கள். இவர்கள் செய்கின்ற கர்மாக்கள் வெறும் கர்மாக்கள். அவர்கள் வெறும் கர்மிகளே; கர்மயோகிகள் அல்ல. ‘வாழ்நாளில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவன் இருக்கின்றான் என்ற நினைப்போடு, செய்கின்ற காரியங்களின் பலனைக் கருதாமல் இறைவனையே நினைந்து தங்கள் கடமை களைச் செய்கின்றவர்கள் யோகிகள். இவர்கள் காலத்தை வென் றிருப்பார்கள்; காலனையும் வென்று விடுவார்கள். இறைவனை 25O