பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் நினைக்காமல் மற்றக் காரியங்கள் எத்தனை செய்தாலும், அவர்கள் வெறும் கர்மிகள்தாம். அவர்கள் காலத்தை வெல்லாமல், காலனுக்கு இரையாகி மரிப்பார்கள். இதுவே இந்தப் பாடலின் கருத்து. நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன் வரு வான்குரு நாதன்;சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்; மரிப் பார்வெறும் கர்மிகளே. (நீல மயிலின் மேல் ஏறி வரும் பெருமானும் எந்த வேளையிலும் அழகையுடைய குறத்தியாகிய வள்ளியுடன் வருபவனுமாகிய குருநாதன் உலக மக்கள் உய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளிய ஒழுக்கத்தை மெல்லத் தெளிந்து உணர்பவர்களாகிய சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார்கள்; அந்தச் சீலத்தை உணராமல் வெறும் கர்மத்தைச் செய்பவர்கள் மரிப்பார்கள். சிகண்டி-மயில், சீலம்-ஒழுக்கம். கர்மிகள் மரிப்பார் என்றமையால் சிவயோகிகள் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவார்கள் என்று கொள்க. அவர் காலத்தை வென்றிருப்பார் என்றமையால் வெறும் கர்மிகள் காலத்தால் வெல்லப்படுவார் என்று கொள்க.)