பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்நாளில் மனிதனது மனத்திண்மையைக் குலைப்பது காமம். இல்வாழ்வில் இருப்பவனையும் துறவியையும் நிலைகுலையச் செய்து அவர்களுடைய ஒழுக்கத்தைப் பாழாக்கிப் பலவகைத் துன்பங்களை அவர்களுக்கும் அவர்களால் பிறருக்கும் உண்டாகும் படி செய்யும் அந்த நோய்க்கு உட்படாதவர்கள் பெரியவர்கள். காமனை வென்றவன் சிவபெருமான். அவன் காமனை எரித்த பிறகு முருகன் திரு அவதாரம் செய்தான். வேலாயுதப் பெருமான் ஞானமே உருவானவன். அவனை நம்பினவர்களுக்குக் காமத்தால் உண்டாகும் துன்பம் இல்லை. அவனுடைய அருள் இருந்தால் மனத்திண்மை உண்டாகும். அந்தத் திண்மையாகிய புணையைக் கொண்டு காமக் கடலைக் கடந்து விடலாம். கந்தர் அலங்காரத்தில் வரும் ஆறு பாடல்களுக்குரிய விளக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது (27 - 32). இந்த ஆறு பாடல்களிலும் மூன்று காமத்தைப் பற்றிப் பேசுகின்றன. இரண்டு பாடல்கள் பெண் மயலில் உழன்று தடுமாறுவதைச் சொல்கின்றன (4, 6). மூன்றாவது காமத்தை வென்ற பெருமிதத்தைச் சொல்கிறது (3). பெண் மயலில் உழன்றதைச் சொல்லும் இரண்டு பாடல்களில் ஒன்று (4) மனத்தைப் பார்த்துப் பேசுவதாக அமைந்துள்ளது. பெண்களைக் கண்டு அவர்களுடைய உறுப்பு நலன்களைப் பாராட்ட எண்ணுகிற நீ, முருகனிடம் உள்ள பொருள்களை எண்ண வாய்ப்பு இருக்கிறதே! அவற்றை எண்ணாமல் இருக்கிறாயே! எப்படி முக்தியை அடைவது? என்று மனத்தை நோக்கி இடித்துரைக்கும் பாடல் அது. அது ஒரு வகையில், காம உணர்ச்சி உண்டாகாமல் இருக்க எவ்வாறு மகளிரைக் காண வேண்டுமென்றும், எவ்வாறு எண்ண வேண்டு மென்றும் வழி சொல்லித் தருகிறது. மற்றொரு பாட்டோ (6)