பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் 'உண்டு. உண்மையைச் சொல்கிறேன். நான் என் கல்யாணத் தின்போது பெண் பார்க்கச் சென்றேன். பெண் வீட்டில் தங்கியது அரை மணி நேரம். அதுவும் பெண்ணைப் பார்த்தது ஐந்தே நிமிஷந்தான். அதற்குப் பிறகு கல்யாணம் ஆகும் வரையில் அவள் உருவம் என் மனத்திலேயே நின்றது." கண்ணும் கருத்தும் 'ஓர் உருவம் மனத்தில் பதிவு பெறவேண்டுமென்பதற்குப் பல முறைகள் காணவேண்டுமென்பது அவசியம் அன்று. ஒரே முறை பெண்ணைப் பார்த்தவன், அவள் என் காதலியாக வரப் போகிற பெருமாட்டி என்ற அறிவோடு பார்த்தான். கண்ணைக் கொண்டு பார்க்கும்போதே தன் கருத்தைக் கொண்டும் பார்த்தான். அதனால் ஒரு முறை பார்த்தாலும் பதிந்தது. பல முறைகள் பார்த்தும் மனத்தில் எத்தனையோ உருவங்கள் பதிவு ஆகாமல் இருந்தும், இந்த உருவம் கண நேரத்தில் பதிவாகிவிட்டது. உருவம் மனத்தில் பதியவேண்டுமென்றால் அறிவோடு, கருத்தோடு பார்த்தல் வேண்டும். ' 'அறிவோடு பார்ப்பது என்றால் என்ன?" "அந்தப் பொருளின் பற்பல பகுதிகளையும் தனித்தனியாகக் கூர்ந்து பார்ப்பது மனத்தில் பதிய வழியாகும்; அதுவே அறிவோடு பார்ப்பது. தனித்தனியாக, ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தால் கடைசியில் அந்தத் திருவுருவம் முழுவதும் மனத்தில் அமையும். இல்லாவிட்டால் அமையாது.” 'நான் நாளைக்குக் கோயிலுக்குப் போவேன். ஆண்டவனது திருவுருவத்தை எப்படிப் பார்ப்பது என்று கொஞ்சம் சொல்லித் தாருங்கள். நீங்கள் சொல்வது அத்தனையும் என்னுடைய அநுபவத்தில் உண்மை என்று படுகின்றது. கண்ணால் பார்க்கும் போதே என்னுடைய அநுபவப் பொருளாகக் கருத்திலும் நான் பார்த்ததனால்தான் மனையாட்டியின் உருவமும் குழந்தையின் உருவமும் மனத்தில் பதிந்திருக்கின்றன. அப்படியே ஆண்ட வனையும் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே; நான் எப்படிப் பார்க்க வேண்டும்? கோயிலுக்குப் போனால் தீபாராதனை காட்டுகிறார்கள். ஒரே கூட்டமாக இருக்கிறது. நான் அவ்விடத்தில் க.சொ.11-18 263