பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எவ்வாறு ஆண்டவனைத் தரிசித்து, அவன் திருவுருவத்தை மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுங்கள்: என்று அன்பன் கேட்கிறான். 2 'அப்பா சொல்லுகிறேன் கேள். சொல்வதற்கு முன்னாலே எனக்கு ஒரு சந்தேகம். உன்னைப் போன்றவர்கள் இவ்வாறு கேட் பதற்கு முன்னாலே ஒரு கேள்வி போடுவது வழக்கமாயிற்றே. அந்தக் கேள்வியைக் கேட்க நீ ஏன் மறந்துவிட்டாய்?" என்றார் அருணகிரியார். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'அது என்ன கேள்வி சுவாமி என்றான். என்ன பயன்? 'என்ன அப்பா நீ இருபதாவது நூற்றாண்டிலே வாழ் கிறேன் என்று சொல்லிக் கொள்கிறாய்! இந்த நூற்றாண்டிலே வாழ்பவர்களின் முதல் கேள்வி, அதனால் என்ன பயன்? என்பது தானே? இறைவனைக் கண்ணாலும் கருத்தாலும் பார்த்துப் பதிவை ஏற்படுத்திக் கொள்வதனால் பயன் என்ன சுவாமி என்றல்லவா நீ எடுத்த எடுப்பில் கேட்க வேண்டும்?" 'சரி. அந்தக் கேள்வியை நீங்களே போட்டுக் கொண்டு விடையும் சொல்லுங்கள்' என்றான் அவன். அருணகிரியார் சொல்கிறார். 'மனிதன் உலகத்தில் வாழ் கிறான். வாழ்வு முடிந்தவுடன் சாகிறான். வாழ்நாளில் வருகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகமிகப் பெரிய துன்பம் சாவு. அந்தத் துன்பம் என்றைக்குமே வராமல் இருந்தால் துன்பமே அவனுக்கு அற்றுப்போய்விட்டது எனலாம். துன்பம் இல்லாமல் போனால் ஆனந்தம் தலை எடுக்கும். இருட்டு எங்கே இல்லையோ அங்கே ஒளி இருக்கும். துன்பம் தருகின்ற இருட்டாகிய சாவை ஒழித்து விட்டால், கால ஜயம் செய்துவிட்டால், இன்ப ஒளி உண்டாகும். அதுதான் இறைவன் திருவுருவத்தை மனத்தில் பதித்துக்கொள்வதன் பயன்' என்றார். 264