பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் 'அடடா நீங்கள் சொல்வதே எனக்கு இன்பமாக இருக் கிறது அந்த யமன் வந்தால் என்ன செய்வான்? அவனே நேரில் வருவானா?” யம பயம் 'அப்பா யமன் நேரே வரமாட்டான். யமன் ஒரு பெரிய ராஜா. அவனுக்குக் கீழே பல தூதர்கள் இருக்கிறார்கள். அந்தத் தூதர்களைத்தான் அவன் ஏவி விடுவது வழக்கம். மிகப் பெரியவர்களானால் அவனே நேரில் வருவான். மார்க்கண்டே யனை இழுத்துப் போக அவனே நேரில் வந்தான். மார்க்கண்டன் எம்பெருமானைத் தழுவிக் கொள்ள, எம்பெருமானையும் சேர்த்து யமன் பாசக் கயிற்றைப் போட்டு இழுக்க, எம்பெருமான் தன் காலாலே காலனை உதைத்துத் தள்ளினான் என்ற கதையை நீ கேட்டது இல்லையா?" "ஆமாம்; கேட்டிருக்கிறேன்.' "மார்க்கண்டேயனைப் பிடித்துப் போக முதலில் எம தூதர்கள் வந்தார்களாம். ஆனால் அவர்கள் அவனை அணுக முடியவில்லை. பின்பு கூற்றுவன் வந்தானாம். அவனாலும் முடியவில்லை. கூற்றுவன் தூதர்களின் தலைவன். அதைக் கேட்டு எமன் சீற்றம் கொண்டானாம். நானே அவனைப் போய்க் கொண்டு வருகிறேன் என்று மீசையை முறுக்கிக் கொண்டு கரிய எருமை வாகனத்தில் புறப்பட்டு வந்தான். திருக்கடவூர் வந்து சேர்ந்தான். தமிழ்நாட்டில் திருக்கடவூர் என்ற தலம் இருக்கிறது உனக்குத் தெரியுமா?" 'தெரியும்; அதைத் திருக்கடையூர் என்று சொல்கிறார்கள்." அப்படி மருவி வழங்குவதற்கும் ஒரு பொருள் சொல்லலாம். மார்க்கண்டேயன் தன் வாழ்நாளின் கடைசி வந்துவிட்டது என்று அஞ்சி இறைவனைப் புகல் புகுந்த கடைசி ஊர் அது. நாமும் நம் முடைய வாழ்நாளின் கடையை, இறுதியை, நினைக்கச் செய்யும் ஊர் ஆதலால் திருக்கடையூர் என்பது ஒரு வகையில் பொருத்தமே." 'அங்கே யமன் மார்க்கண்டேயன் மேலே பாசம் வீசினான். பாசத்திற்கு அகப்படாத ஆண்டவனையும் சேர்த்துப் பாசம் வீசிய தால் செத்து ஒழிந்தான். மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றான் என்ற கதையைக் கேட்டிருக்கிறேன். எமனுடைய தூதர்கள் வருவார்கள். 265