பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஒலையை நீட்டுவார்கள். அதை வாங்கிப் படித்தவர்கள் திரும்ப வந்து அதில் என்ன எழுதியிருந்தது என்று சொன்னது கிடையாது. சொல்லியிருந்தாலாவது அவன் வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கற்றுக் கொள்ளலாம். இப்பொழுது நான் என்ன செய்வேன்!" அறிகுறிகள் 'யமன், எருமைக்கடா, ஒலை என்பனவெல்லாம் அறிகுறிகள் நுட்பமான பொருள்களை நினைவுபடுத்திக் கொள்வதற்காகப் பருப் பொருளான அடையாளங்களை வைத்து வழங்குவது பெரியோர்கள் வழக்கம். மரணத் துன்பத்தை நாம் நினைவு கூர்வதற்குப் பயங்கரமான யமனையும் பிற பொருள்களையும் அறிகுறிகளாகக் காட்டுகிறார்கள். பருப்பொருளாகச் சொன்னாலும் அறிவுடையவர்கள் உள்ளுறையை உணர்ந்துகொண்டு விடு வார்கள். நம் நாட்டுப் புராணக் கதைகள் வரலாறாகத் தோன்றி னாலும் நுட்பமான கருத்துக்களை உள்ளுறையாக உடையவை." 'அவை கிடக்கட்டும். இப்பொழுது யமன் விஷயத்தைச் சொல்லுங்கள்' என்று அன்பன் இடைமறித்துக் கேட்டான். "அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். நீ இவ்வுலகில் இத்தனை காலந்தான் வாழ்வாய் என்று உன்னைப் படைக்கும் போது நீ செய்திருக்கும் பாவ புண்ணிய வினைகளை எல்லாம் கணக்கிட்டு உன் தலையில் பிரம்மன் எழுதி அனுப்பிவிட்டான். உன் தலை எழுத்தின் ஒருபடி எமனுக்கும் அப்பொழுதே அனுப்பப்பட்டு விடுகிறது. உன் ஆயுள் காலம் முடியும்போது அந்தப் படியாகிய ஒலையை எடுத்துக் கொண்டு யமதூதன் வருவான். 'ஒப்பந்தப்படி நீ இவ்வுலகில் வாழவேண்டிய காலம் முடிந்துவிட்டது; இனி என்னுடன் வா' என்று குறிப்பிக்க யமதூதன் ஒலையை உன்னிடம் நீட்டுவான். அதைப் பார்க்கும் போதே உன் கண் பஞ்சடைய ஆரம்பிக்கும். வாய் குழறும். காது அடைத்துக்கொள்ளும். "ஒலையையும், அதைக் கொண்டுவந்து உன்னிடம் கொடுத்த யமதூதனையும் கண்டு உயிர் உடம்பை விட்டுவிடவேண்டுமே என்று திண்டாடுவாய்; வேதனைப் படுவாய். ஒலையைக் கண்ட 266