பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் இறைவனை நினைந்து வழிபட்டால் போதும். அது மற்ற நேரங்களில் மனசில் இருக்கும். புதிதாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டவன், காலையிலே சாப்பிட்டுவிட்டுக் காரியாலயம் போகும்போது, தன் மனையாட்டி மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டு, ஆசை விழிகளோடு அவளைப் பார்த்துவிட்டு வெளியே போகிறான். இருந்தாலும் இடையிலுள்ள நேரங்களில் காரியாலயத்தில் அவன் செய்கின்ற வேலைகளுக்கிடையே மனையாட்டியின் நினைவும் அவன் கருத்தில் வந்து வந்து மறைந்துகொண்டே இருக்கிறது. காலையும் மாலையும் மனைவியைப் பார்ப்பது செயலாக இருந் தது. இடைப்பட்ட காலத்தில் எப்படி இருக்கிறது? மனத்தின் நினைவாக இருக்கிறது. அப்படியே காலையும் மாலையும் இறை வனைத் தரிசித்து வழிபட்டு அவன் திருவுருவத்தை மனத்திலே நினைந்து பழகினால் இடைப்பட்ட காலத்திலும் அந்த நினைவு மறக்காமல் இருக்கும். கடைசி நினைவு நாம் எத்தனை காலம் வாழ்ந்தாலும் கடைசியில் இறந்து படுவோம் என்கிற ஞானம் வரவேண்டும். இறைவன் நாமத்தைச் சாகிறபோது சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தால் அது இயலாது. எவ்வளவு முயன்றாலும் பழைய வாசனையே முன்வந்து நிற்கும். இறைவன் நினைவு சாகிறபோது வரவேண்டுமானால் வாழும்போது ஒவ்வொரு சந்தியிலும் அவனை நினைத்துப் பழகியிருக்க வேண்டும். “காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே உற்றார் அழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு” என்று பட்டினத்துப் பிள்ளையார் கூறுகிறார். ஆகவே, இறக்கும் போது இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்று இருப்ப தனால் பயன் இல்லை. மனத்திலே அவனுடைய நினைவாகிய வாசனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற வேண்டும். எப்படி ஏறும்? இராக்காலத்தில் ஒவ்வொரு நாளும் படுத்துக் கொள்ளும்போது 269