பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து மாற்றலாம் என்று கண்டிருக்கிறார்கள். அவன் குற்றம் செய் வதற்குக் காரணம் அவனது இளம் பருவ முதல் மனத்தில் படிந்த வாசனை என்று உளநூலறிஞர் சொல்கிறார்கள். திடீரென்று குழந்தை கோபுரத்தைப் பார்த்துப் பயந்து கொண்டு அழுகிறது. அதற்குக் காரணம் என்ன? ஏதோ ஒரு காலத்தில் கோபுரத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் வாசனை அதன் அடி உள்ளத்தில் இருப்பதனால்தான் பயப்படுகிறது என்கிறார்கள். இளமைக் காலத்தில்பட்ட அநுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக நின்று வயசு ஆக ஆக அதன் பரிணாமமான உணர்ச்சிகளை எழுப்புமாம். இப்படி விஞ்ஞானம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி அறிந்தவர்களுக்கும் புலப்படாத பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவர்கள் இந்தப் பிறவியில் இளமைக் காலத்தில் உண்டான அநுபவத்தை ஏடு புரட்டிப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் ஒரு படி மேலேயே சென்றிருக்கிறார்கள். மனம் என்பது இந்தப் பிறவி அநுபவத்தை மாத்திரம் கொண்டு அமைவது அன்று. பிறவி தோறும் வரும் வாசனை படலம் படலமாக அதன்பால் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் பிறவியில் ஏற்படும் அநுபவங்களின் வாசனை கடப்பைக் கல் போல இருக்கும் என்றால், முந்திய பிறவிகளின் வாசனை வெங்காயத் தோல் போல இருக்கும் என்ற சொல்லலாம். கடப்பைக் கல்லை விஞ்ஞான அறிவினால் பார்த்துவிட்டார்கள். அதற்குப் பிறகு மிக நுட்பமாக வெங்காயத் தோல் இருப்பதை மெய்ஞ்ஞான அறிவினால் நம் பெரியோர்கள் பார்த்திருக்கிறார் கள். நம்முடைய மனத்தில் தோற்றுகிறதை நினைவு என்று சொல்கிறோம். நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி மனத்துக்கு அடியில் இருந்து கொண்டு விளைவுகளை உண்டாக்கும் நினைவு களை அடிமனப் பதிவுகள் என்று சொல்வார்கள். இந்த இரண்டுக்கும் கீழே ஆழமாகவும், மிக மிக நுட்பமாகவும் உள்ளவைகளை வாசனை என்று சொல்வது சமயநூல் மரபு. இந்த மூன்று நிலை களில் முதல் நிலையாகிய நினைவை நாம் தெரிந்து கொண்டிருக் கிறோம். இரண்டாவதாகிய அடிமன வடுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். மூன்றாவதாகிய வாசனையை மெய்ஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 17