பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் பெரும்பாலும் வீரத்தோடு தொடர்புடையது புறம். அகப் பொருள் குறிஞ்சி முதலிய ஐந்து திணைகளை உடையது. புறப்பொருள் வெட்சி முதலிய பல திணைகளை உடையது. அகப்பொருளின் முதல் திணை குறிஞ்சி. புறப்பொருளின் முதல் திணை வெட்சி. இந்த இரண்டும் இரண்டு மலர்களால் பெயர் பெற்றவை. குறிஞ்சிப் பூ என்பது மலையில் விளைகின்ற பூ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும். அது குறிஞ்சி நிலத்துக்கு அடையாளம். குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன். அதனால் குறிஞ்சிப் பூவை விரும்புகிறவன் அவன். அதுபோலவே புறப் பொருளின் முதல் திணையாகிய வெட்சிக்குரிய பூவும் முருகனுக்கு ஏற்றது. அகப்பொருள் புறப் பொருளாகிய இரண்டிலும் முதலில் முருகனுக்குரிய மலர்களை நினைப்பூட்டும் திணைகள் இருக்கின்றன. புறப் பொருளில் வீரத்திற்கு உரிய போர் முதலிய செய்திகள் வருகின்றன. இந்தக் காலத்தைப்போல அணுகுண்டைப் போட்டுப் போரில் கலந்து கொண்டவர்கள், கலக்காதவர்கள் எல்லோரையும் அழிப்பது அந்தக் காலத்தில் இல்லை. போர் செய்வதற்காக என்று தனியாகவே போர்க்களம் உண்டு. போருக்கும் ஒரு வரையறை உண்டு. யுத்த தர்மம் இன்னது என்பதைப் பாரதம் முதலிய நூல்களில் பார்க்கலாம். போரேயானாலும் வரையறை யோடு நடப்பதால் அறப்போர் என்று சொன்னார்கள். ஒரு நாட்டு அரசனுக்கும், மற்றொரு நாட்டு அரசனுக்கும் பகை மூண்டுவிட்டால் உடனே படை எடுத்து வந்து முற்றுகை யிட மாட்டார்கள். பகைவன் நாட்டுக்குச் சென்று முதலில் போர் செய்யப் போகிறோம் என்பதற்கு அடையாளமாக நாட்டிலுள்ள பசுமாடுகளை ஒட்டிக் கொண்டு போவார்கள். குழந்தைகள், கிழவர்கள், பெண்கள் எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடி விடலாம் என்று பறை சாற்றுவார்கள். மேயப் போன மாடுகளை ஒட்டிப் போய்விடுவார்கள். 'சண்டைக்கு எடுபிடி மாடு பிடி' என்று ஒரு பழமொழி உண்டு. பாரதத்தில் விராத னுடைய மாடுகளைத் துரியோதனன் படையைச் சார்ந்தவர்கள் ஒட்டிச் சென்றபோது அர்ச்சுனன் அவற்றை மீட்டுவந்தான் என்று படித்திருக்கிறோம். போருக்குத் தொடக்கமாக ஆநிரையைக் கைப் பற்றுவது வெட்சியென்னும் திணை. அதற்கு அடையாளம் வெட்சிப் 275