பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பூ அது முருகனுக்கு விருப்பமான மலர். முதல் திணை வெட்சி, கடைசித் திணை வாகை, அது வெற்றியைச் சொல்வது. அதைக் காட்டும் பூ வாகை. அதையும் முருகன் அணிந்திருக்கிறான். தமிழ் இலக்கணத்தில் அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்டோடும் அவற்றின் பொருளாகிய காதலோடும், வீரத் தோடும் சம்பந்தப்பட்டவன் முருகன் என்பதை உணர்த்தக் குறிஞ்சி மலரும், வெட்சி மலரும் முருகனுக்கு உரியனவாக இருக்கின்றன. கையில் சிவந்த செச்சை மாலையும் தன் கைகளிலே சிவந்த வெட்சிப் பூ மாலையைக் கட்டிக் கொண்டிருக்கின்றான் முருகன். கொடி முதலியன 移够 ண்டவன் கோயிலுக்குப் போய், அவன் திருவுருவத்தை மனத்திலே பதித்துக் கொள்ளும்படியாக எப்படிப் பார்ப்பது? என்று கேட்டவனுக்கு அருணகிரியார் சொல்வதாக கற்பனை செய்து கொண்டோம்? "அதோ இருக்கிறான் பார் கந்தவேள். முதலில் அவன் இடையில் கட்டிய சேலையைப் பார். கண்ணை மூடிக் கொண்டு அதை நினைக்க வேண்டும். பின்னர் அவன் சீராவை நினைக்க வேண்டும். கையில் சிவந்த செச்சை மாலையை அணிந்திருக் கிறான்; அதை நினைக்கவேண்டும்' அப்புறம்? சேவல் பதாகையும் தோகையும் சண்டையைப் பற்றிச் சொல்வது போலச் சீராவைச் சொன்னார்; வெட்சியைச் சொன்னார். கத்தியை எடுத்துக் கொண்டு, வெட்சி அணிந்து கொண்டான். சேவற் கொடியைப் பிடித்துக் கொண்டான். மயில்மேல் ஏறிக் கொண்டான். உடனே தமிழ் படித்த மக்களுக்கு ஆண்டவன் போர் செய்யப் போகிறானோ என்ற நினைவு வந்துவிடும் அல்லவா? ஆண்டவன் ஆயுதங்களை எடுத்தாலே போதும்; சண்டை போட வேண்டும் என்னும் அவசியமே இல்லை; பகைவர்கள் அழிந்து போவார்கள். ஜனகனுடைய வில்லைத் தூக்க முடியாமல் பலர் திணறி னார்கள். ஆனால் ராமன் என்ன செய்தான்? வில்லினிடம் அவன் 276