பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஒலையும் தூதரும் கண்டுதிண் டாடல் ஒழித்து, எனக்குக் காலையும் மாலையும் முன்நிற்கு மே,கந்த வேள்மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்தசெச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. (கந்தவேளினது இடையில் கட்டிய ஆடையும் உடை வாளும் கையில் கட்டிய சிவந்த வெட்சி மாலையும் அவன் உயர்த்திய சேவலாஇய கொடியும் அவன் ஏறும் வாகனமாகிய மயிலும் வெற்றி மாலையும் நான் கண்டு தியானித்த பழக்கத்தினால், யமனுடைய ஒலையையும் அவன் விடும் தூதரையும் நான் கண்டு மனம் கலங்குவதை நீக்கி எனக்குக் காலையிலும் மாலையிலும் வந்து முன் நிற்கும். ஒலை - யமன் ஒலை. தூதர் - எமது தர். 'வருபவர்கள் ஒலை கொண்டு யமனுடைய தூதரென்று' என்று திருப்புகழிலும் இவ்விரண்டையும் சொல்வார். கண்டு திண்டாடுவது இனிமேல் இல்லையாகப் போகும் உறுதி பற்றி, ஒழித்து என்று இறந்த காலத்தால் கூறினார். ஒலையும் தூதரும் இனி வரப்போகின்றவையானாலும் அவற்றை எண்ணி மனம் கலங்குவது இப்போது நிகழும் நிகழ்ச்சி. அதை ஒழித்து முன் நிற்கும் என்று உரை கூறுவதும் பொருந்தும். மருங்கு -இடை, சேலை - ஆடை சீரா - உடைவாள். கையென்றது முன்கை, தோளுமாம். செச்சை - வெட்சி. பதாகை - கொடி. வாகை - வெற்றிக்குரிய மாலை.)