பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் சென்ற பாட்டில் முருகனுடைய திருவருளில் ஈடுபட்ட வர்கள் அவனுடைய திருவுருவத்தை மனத்தில் தாரணை செய்து கொண்டு, காலையும் மாலையும் தியானம் செய்தால் யமனைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு ஒழிந்து போகிறது என்பதைப் பார்த்தோம். சர்வாலங்கார மூர்த்தியாக இருக்கும் எம்பெரு மானுடைய திருக்கோலத்தைக் கண்டு கண்டு உள்ளத்திலே அவனது திருவுருவத்தை அமைக்க வேண்டுமென்று சொல்லும்போது, அது சாஸ்திரத்துக்கு விரோதமாக இருக்குமோ என்று ஐயப்பாடு தோன்றுகிறது. வேத சாஸ்திரங்களிலும் உபநிடத நூல்களிலும், வாக்கு மனம் கடந்தவனாக ஆண்டவன் இருக்கிறான் என்றும், குணம் குறி கடந்தவன் எம்பெருமான் என்றும் சொல்லி இருக்க, தோத்திரப்பாடலோ அவன் திருவடியையும், தண்டையையும், மருங்கில் கட்டிய சேலையையும், சீராவையும், கையில் கட்டிய செச்சை மாலையையும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா, இல்லையா? இறைவனுக்கு உருவம் இல்லையென்று சாதிக்கப் புகுந்த வர்கள் சிலர் முன்பும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். அநுபவத்துக்கு முன் "இறைவனைப்பற்றி ஆராய்வதிலே பயன் இல்லை. அவன் இயல்பை அநுபவத்தில்தான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றால் அது நம்மால் முடியாத காரியம். ஆராயவும் இயலாது; அநுபவமும் இல்லை என்றால், நமக்கு உய்வே இல்லையா? ஒர் ஊருக்குப் போகிறோம். அந்த ஊரில் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். ஆனால் சாப்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் சாப்பிடாமல் அறிந்து கொள்ள முடியாது. நாமே சாப்பிட்டால்தான் அதைத் தெரிந்து