பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் வேண்டுமென்று ஒரு பத்திரிகையின் ஆசிரியர் நினைத்தார். செல்வம் உடையவர்கள் பல பல இடங்களில் இருந்து ஆண்டுதோறும் வந்து பார்த்துப் போனார்கள். ஆனால் ஏழைகள், வரமுடியாதவர் கள் வெளியூர்களிலிருந்து வர முடியவில்லை. படங்களின் மூல மாவது அவர்கள் கண்டு களிக்கட்டும் என்று நினைத்து ஓர் ஒவி யனையும், படம் பிடிக்கிறவனையும் பத்திரிகைக் காரியாலயத் திலிருந்து அனுப்பி வைத்தார். இருவரும் பூஞ்சோலைக்குச் சென்றார்கள். ஒவியன் பூஞ் சோலையின் அழகைக் கண்டு கண்டு பருகினான். அந்தச் சோலையின் உருவத்தைப் பல வகையான வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினான். படம் எடுப்பவன் கருவியைக் கொண்டு படம் பிடித்தான். இரண்டு பேரும் தங்கள் படங்களைக் கொண்டுவந்து பத்திரிகையின் ஆசிரியரிடம் கொடுத்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, "என்ன இது? நீங்கள் ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் உள்ள பூஞ்சோலையை இவ்வளவு சிறிய படத்திலே கொடுத்துவிட்டீர்களே?’ என்றா அவர் கேட்பார்? கண்ணுக்கு ஒரே சமயத்தில் அகப்படாமல் விரிந்து கிடக்கின்ற சோலையை அவர்கள் கண்ணுக்குள் அடங்கும் சோலையாகக் கொடுத்தார்கள். அது சோலையின் உருவம் அல்ல என்று சொல்ல முடியாது. ஆனால் சோலை முழுவதும் இல்லை. அதன் ஒரு பகுதியைத்தான் ஒவியமாகவும் படமாகவும் கொடுத்தார்கள். அந்த உருவத்தைப் பார்க்கும்போது எல்லையற்றுப் பரந்து கிடக்கின்ற சோலையை நேரில் பார்த்தவர்கள், அந்தச் சோலை யின் உருவத்தை நினைவுக்குக் கொண்டு வருவார்கள் அல்லவா? சிறைப்பட்டவன் காணும் காட்சி ஒரு சிறைக்கு நடுவில் அறை ஒன்று இருக்கிறது. அதற்குள் ஒருவன் இருந்தான். சிறைக்குச் சன்னல்கள் இருந்தாலும் அவை எல்லாம் மூடப்பட்டுக் கிடந்தன. பல நாள் அவன் அச் சிற்ற றைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அவனுக்கு வெளி உலகம் எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை. எல்லையற்றுப் பரந்து கிடக்கின்ற உலகம் அவனைப் பொறுத்தவரையில் அந்தச் சிறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தது. ஒரு நாள் சிறைக் காவலாளி சன்னல் கதவைத் திறந்தான். அறைக்குள் 235