பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வேண்டும். சிறைக்குள்ளேயே இருந்து பார்த்த பொருளுக்கும், சிறைச் சன்னல் அருகில் நெருங்கிப் பார்த்த பொருளுக்கும், சிறையைவிட்டே வெளியே வந்து பார்த்த பொருளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது கைதிக்குத் தெரியும். அவை யாவும் ஒன்றுதான் எனவும் உணர்கிறான். கடலைக் கண்டேன் என்றால் கடல் முழுவதையும் கண்டு விட்டானா? கடற்கரையில் நின்று சமுத்திரத்தைப் பார்த்தான். தொலைநோக்கிக் கண்ணாடியை வைத்துக் கொண்டும் பார்த்தான். ஆனால் அந்த எல்லைக்கும் அப்பாலேயும் கடல் இருக்கிறது என உணர்ந்தான். நீலக் கடலையும், தன் வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழக்கிக் கொண்டு வரும் அலைகளையும் கண்டு விட்டேன் என கத்துகிறான். அகண்டமான ஒன்றை அவன் எப்படிக் கண்டான், கண்டமாகக் கண்டான். எல்லைக்குள் அகப்படாத அகண்டமாய் இருக்கிற ஆண்ட வனைக் கோயிலுக்குள் இருக்கும் விக்கிரகத்திற்குள் பக்தர்கள் கண்டார்கள். நெருங்கி நெருங்கிப் பார்க்கும்போது முதலில் வெறும் கையும் காலுமாகத் தோற்றிய ஒன்று ஒளிவிஞ்சும் திருவுருவமாகத் தோற்றியது. பார்த்துப் பார்த்துப் பரவசத்தில் கண்ணிர் சொரிய நின்றார்கள். எண்ணும் அநுபவமும் தபால்காரன் ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த என் பெண் அந்தக் கார்டில் இருந்த 4,800-80 என்ற எண்களைப் படித்தாள். அவள் கையில் இருந்து அதை வாங்கிய என் பையன், 'அது வெறும் 4,800-80 அல்ல; 4,800 ரூபாய் எண்பது பைசா என்றான். என் பெண்ணுக்கு வெறும் எண்களே தெரியும்; ரூபாய் பைசாக் கணக்குத் தெரியாது. என் பையன் அக்கார்டை என்னிடம் கொண்டு வந்து கொடுத் தான். அதைப் பார்த்தபோது முதலில் எனக்கும் 4,800-80 என்ற எண் தெரிந்தது. பின்னர் அது 4,800 ரூபாய் 80 பைசா என்றும் தெரிந்தது. உடனே எனக்கு ஒதுவித இன்பம் உண்டாயிற்று. ஏன் தெரியுமா? என்னுடைய உழைப்பினால் வரும் பணத்தை நான் பாங்கியில் போட்டு வந்தேன். என் கணக்கில் இன்றையத் தேதி யில் நாலாயிரத்து எண்ணுறு ரூபாய், எண்பது பைசா இருக்கிறது 29O