பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தனக்கு அடையாளமாக அவன் கையிலே வேலைத் தாங்இ; கொண்டு நிற்கிறான். வேல் அவனுக்கு அடையாளம் மாத்திரம் அல்ல. அகண்டமாக இருக்கிற புறவெளியைக் காணச் செய் வதற்கு வேண்டிய ஞானத்தின் அடையாளமாக அதை அவன் வைத்திருக்கிறான். - வேலே விளங்கு கையான். மாணவர்களுக்கு மயக்கம் இல்லாமல் விஷயத்தைப் போதித் கின்ற நல்ல ஆசிரியர் அருணகிரியார். ஆகையால் எடுத்த எடுப்பி லேயே, "அகண்டமாக இருக்கும் ஒன்றை, வாக்கு, மனம், செயல் இவற்றுக்கு அப்பாற்பட்ட இறைவனை நான் எப்படி அப்பா உனக்குச் சொல்ல முடியும்?” என்று சொல்லிப் பக்தர்களைப் பயமுறுத்தாமல், 'இறைவனது அருளைப் பெற்று இன்பத்தைச் சுவைக்கத்தானே விரும்புகிறாய்? இங்கே வா அப்பா எனத் தம் அருகில் அழைத்து வைத்துக் கொண்டு, அகண்டமாக இருக்கிற வெளியையும், கண்டமாக இருக்கிற ஒளியையும் சம்பந்தப்படுத்திப் பாலம் போட்டு, மயக்கம் நீங்க அழைத்துப் போகிறார். வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கெளவிங்ங்ன் காண்பதல் லால்மண வாக்குச்செய லாலே அடைதற் கரிதாய் அருவுரு வாகிஒன்று போலே இருக்கும் பொருளைஎவ் வாறு புகல்வதுவே? அகண்ட சொரூபமாய் இருக்கிற பொருளை எவ்வாறு ல்வது? மனவாக்குச் செயலாலே அடைவதற்கு அரியவன். உருவாகி ஒன்று போலே இருக்கும் பொருள் அல்லவா வன்? அவனை எவ்வாறு புகல்வது? என்பதை முதலில் சொல்லவில்லை. பயந்து போய்விடப் போகிறார்களே என்பது போல அதைப் பின்னாலே சொல்லி, அந்த அகண்ட உருவத்தைக் கண்டமாகப் படம் பிடித்து முன்னால் நிறுத்துகிறார். வேலே விளங்கு கையான். 292