பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் ஆண்டவன் திருக்கரத்தில் இருப்பதனாலே அந்த வேல் விளக்கம் பெற்று இருக்கிறது. யாருடைய கையில் சேர்ந்தால் எல்லாப் பொருளும் விளக்கம் பெறுமோ, அந்தத் திருக்கரத்தில் அது இருப்பதனாலே அது விளங்குகிறது. வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்தி றைஞ்சி. ஆண்டவன் திருக்கோயிலுக்குப் போனால் அவன் கையிலே விளங்குகின்ற வேலைப் பாருங்கள். அஞ்ஞான இருளைப் போக்கி, ஞான ஒளியை அளிக்கின்ற வேல் அது. நம் கையில் அதை வாங்கிக் கொள்வதைவிட அது அவன் கையிலேயே இருந்தால் தான் நமக்குப் பயன்படும். அவன் அருளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வீழ்ந்து இறைஞ்சுதல் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி. பக்தர்கள் பற்றிக் கொள்வதற்காகச் செக்கச் செவேல் என்று இருக்கும் தன் இரண்டு பாதங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நிற்கிறான் அவன். அவை செந்தாமரை போன்ற திருவடிகள்; செய்ய தாள். செய்ய என்பது செம்மையான என்று பொருள்படும். எம்பெருமான் திருவடி நிறைவு பெற்றது; நேர்மையானது; குணம் நிறைந்தது; எல்லாவிதமான தன்மை களும் நிரம்பியது. நடக்க நடக்கப் பின்னும் சிவக்கின்ற திருவடி அல்லவா அது? அன்பர்களுக்கு அருள் செய்ய நின்ற இடத்தில் நிற்காமல் ஒடுகிறான். தன்னை நினைக்கின்ற ஒவ்வொரு வருடைய வன்மனக் கருங்கற் பாறையிலும் நடமாடி அவன் கால் சிவந்து நிற்கிறது. அதனால் செய்ய தாள் உடையவனாக இருக் கிறான். அந்தத் தாளைப் பார்? - பின் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்கிறார் வள்ளுவர். இறைவனைப் பார்த்து அவன் தாளைத் தலையால் வணங்க வேண்டும். தாளினில் தலை வீழ்ந்து 293