பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி. இறைவனுடைய செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி, அகங்காரம், மமகாரம் போய்க் குழைந்து நின்றால் என்ன ஆகும்? மால் கொள்ளுதல் மாலே கொள. மால் என்பது காதல்; மயக்கம்; இன்னது என்று தெரியாது நிலை என்று கொள்ளலாம். மிகுதியாகத் துன்பம் வரும்போதும், இன்பம் வரும்போதும் ஒன்றும் தெரியாததோர் நிலை வரும், அதையே மயக்கம் என்னலாம். அதைப்போன்ற ஒரு நிலை இறைவன் பாதத்திலே வீழ்ந்து இறைஞ்சி, குழைந்து நிற்கும் போது வரும். இதுவரையிலும் ஆண்டவனது வேல், கை, கால் என்று பார்த்து வந்த நிலை போய், கொஞ்சும் முகம் மாறி, ஒளி விஞ்சும் முகமாகத் தோன்ற, அதைப் பார்த்து அப்படியே பிரமித்து, வியப்பு எய்தித் தன்னை மறந்து நிற்கும் நிலை உண்டாகும். இங்ங்ன் காண்பதல்லால். இவ்வாறு காண்பதல்லாமல்..... மேலே என்ன சொல்லப் போகிறார்? சொல்ல அரியது "இதற்குமேல் நான் அவனை எப்படி அப்பா சொல்ல முடியும்' எனச் சொல்லப் போகிறார். இங்ங்ன் காண்பதல்லால்' என்று சொல்வதிலிருந்தே ஏதோ ஒன்றைக் கண்டு இன்பத்தைச் சுவைத்த மிதப்பிலே அவர் பேசுகிறார் என்பது நமக்குப் புலனாகும். அவர் சொல்வது அவருடைய அநுபவம் என்றும் தெரிகிறது. இறைவனைப்பற்றி அடையாளம் சொல்கின்ற நிலை இதுவரைக்குந்தான். இறைவனது திருவுருவத்தைக் காணுகின்ற நிலை இதோடு முடிந்துவிடுகிறது. எம்பெருமான் திருவடியில் வீழ்ந்து இறைஞ்சுகின்ற நிலை வரையில் இருப்பது அது. நெருங்கி நெருங்கி, அவன் அடையாளங்களை ஒவ்வொன்றாகப் 296