பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் பார்த்து வந்து, அவன் திருவடியில் வீழ்ந்தாகிவிட்டது. உருவம் மறைந்து ஒளி விஞ்சும் தோற்றம் உண்டாகிறது. அதைப் பார்த்து ஆனந்தமயமான காதலில் ஒருவகைப் பிரமிப்பு, அதிசய நிலை வந்துவிட்டது. இதுவரையில் அருணகிரியார் முருகன் கையில் உள்ள வேலைச் சொன்னார். வேல் விளங்கும் கையைச் சொன்னார். கையான் செய்ய தாளினைச் சொன்னார். செய்ய தாளினில் வீழச் சொன்னார். வீழ்ந்து மனம் குழைந்து இறைஞ்சச் சொன்னார். இறைஞ்சி மால் கொள்ளச் சொன்னார். அதற்குப் பிறகு எப்படி எம்பெருமானைக் காண்பது என்பதைச் சொல்கிறார். 'இவ்வாறு காண்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல முடியும்?" என்கிறார். சாப்பாடு எங்கே கிடைக்கும் எனக் கேட்டவனுக்கு, 'இன்ன இடத்தில் கிடைக்கும்" என்று சொல்கிறான் ஒருவன். பிறகு, "சாப்பாடு எப்படி இருக்கும் தெரியுமா? உள்ளே போய் என்னைப் போல நீங்கள் சாப்பிட்டு வந்தீர்களானால் அப்பொழுது தான் அதன் சுவை உங்களுக்குத் தெரியும்' என்று சொல்கிறான். உணவு கிடைக்கும் இடம் தெரிந்து கொண்டாகிவிட்டது. அதன் சுவையை உண்டால்தானே தெரிந்து கொள்ள முடியும்? 'நீங்கள் சொல்லி வந்தது மிகவும் இனிமையாக இருக்கிறது. மேலும் சொல்லுங்கள். மாலே கொள நின்று எப்படிக் காண்பது? இறைவன் எப்படி இருப்பான்?' என்று அருணகிரியாரைக் கேட்டால் அவர் எப்படிச் சொல்வார்? எவ்வாறு புகல்வது? 'நான் எப்படி இதற்குமேல் சொல்ல முடியும்? அது எப்படி இருக்கும் என்பதை நீயே அநுபவித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும், சர்க்கரை இனிக்கிறது என்கிறேன். சர்க் கரையை நீ வாயில் போட்டுக் கொண்டால்தான் இனிப்பாகிய சுவையைத் தெரிந்துகொள்ள முடியும். எம்பெருமான் திருக் கரத்திலுள்ள வேலைப் பார். வேல் விளங்கும் கையைப் பார். கையான் தாளைப் பார். அதில் விழு. வீழ்ந்து இறைஞ்சு. எல்லையற்ற ஆனந்த மயமான மால் கொள் என்று சொன்னேன். அதற்குமேல் நான் எப்படிச் சொல்ல முடியும்? இங்ங்ன் நீயே காண்தல்லால் என்னால் எவ்வாறு புகல முடியும்?' என்கிறார். 297