பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையாகத் தாய் தேடலாம்; இறப்பாகக் கல்யாணம் பண்ணலாம்; ஆனால் அவள் கணவனோடு சேர்ந்து அடையும் இன்பம் எப்படி இருக்கும் என்று மகள் கேட்டால் சொல்ல முடியுமா? 'மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்எனிற் சொல்லுமா றெங்ங்னே?" அந்த இன்ப சுகத்தை மகளே அநுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இருக்கும் பிரபஞ்சச் சேற்றிலிருந்து விடுபட்டு, அகண்ட சொரூபமாய் நிலவும் ஆண்டவனை அடைவதற்குரிய பாலத்தை அருணகிரியார் போட்டுக் கொடுத்து விட்டார். அந்தப் பாலம் என்ன? எம்பெருமானின் திருக்கரத்தில் இருந்து அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான வேலைப் பார்ப்பது; வேல் விளங்கும் கையைப் பார்ப்பது; கையான் செய்ய தாளைப் பார்ப்பது; தாளினில் வீழ்வது; வீழ்ந்து இறைஞ்சுவது; இறைஞ்சி மால் கொள்வது. அப்புறம் அருணகிரியாரைப் போலவே நாமும் காணவேண்டி யதுதான். ஒன்றுபோல மாறுபாடு இல்லாமல் இருக்கும் பொரு ளாக அது இருப்பதனால் அவருக்கு ஏற்பட்ட இன்ப அநுபவமே நமக்கும் ஏற்படும். 'பல ஆண்டுகளுக்கு முன் அவர் பெற்ற அநுபவம் அது; இன்று அதே அநுபவம் நமக்குக் கிடைக்குமா?" என்ற ஐயமே வேண்டாம். என்றும் மாறாமல் ஒன்று போல இருக்கும் பொருளின் அநுபவமாதலின் அது என்றும் ஒரே மாதிரி இருக்கும். புகல்வதற்கு அரியதான அகண்ட பர வெளியை, அருண கிரியார் உபதேச வாசலைத் திறந்து கண்டமாகக் காட்டினார். 'உள்ளே போய்ச் சொல்வதற்கு அரியதாய் அருவுருவாய் இருக் கிற பொருளை நீயே கண்டு கொள்' என்கிறார் பரம கருணை யினால். சாஸ்திரக் கருத்துக்கும், தோத்திரங்களின் கருத்துக்கும் முரண்பாடு இல்லை. இரண்டிற்கும் பாலமாக இருப்பது இறைவனது செய்ய தாள். அதில் வீழ்ந்து இறைஞ்சி மால் கொண்டு நாமே கண்டுகொள்ள வேண்டும். அப்படிக் கண்டால் முதலில் 4800-80 என்பது எண்ணாகத் தோற்றி, பின்பு ரூபாயாகத் தோற்றி, பின்பு நம்முடைய பணமாகவும், பிறகு நாம் ஊர்ந்து 299