பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் இப்போது சங்கடமான பாட்டு ஒன்றைப் பார்க்கப் போகி றோம். அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திரத்தைப் பலவகை யாகச் சொல்வதுண்டு. திருப்புகழில் பெண்களைப் பற்றிச் சொல்கின்ற பாடல்கள் மிகுதியாக இருக்கிறதைப் பார்த்து, அவர் தம் வாழ்நாளில் காமத்தினாலே அலைப்புரண்டு அதனால் தொழுநோய் பெற்று வாடினார் என்று சிலர் சொல்வர். அருணகிரியார் கருணை ஆனால் அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் சொன்ன அத்தனை துன்பங்களையும் ஒருவர் அநுபவிக்க வேண்டுமானால் அது ஒர் ஆயுளில் நிகழ இயலாது என்று முன்பே சொன்னேன். பல நூறு பிறவிகள் எடுத்தால்தான் அத்தனை குற்றங்களையும் செய்யமுடியும்; அவ்வளவு துன்ப அநுபவங்களையும் பெற முடியும். அருணகிரிநாதப் பெருமான் உலகில் வாழ்கின்ற மக்கள் செய்கின்ற குற்றங்கள் அத்தனையும் படுகின்ற துன்பங்கள் அத்தனையும் தம்முடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்ததைப் போல எண்ணி இறைவனிடம் இரங்குகின்ற பெருங்கருணையாளர். 'அப்படியானால் மக்கள் எத்தனையோ குற்றங்களைச் செய் கின்றார்களே! அவை எல்லாவற்றையும் குறிப்பிடாமல் பெண் களைப் பற்றி மட்டும் மிகுதியாகக் கூறியிருப்பானேன்?' என்ற கேள்வி எழலாம். அதனாலேதான் அவர் நமக்காகவே பாடினார் என்று கொள்ளலாம். எப்படி என்று பார்ப்போம். மிகுதியாக உள்ள நோய் ஒரு டாக்டர் எந்த வியாதிக்காரர் தம்மிடம் வந்தாலும், நன்றாகச் சோதனை செய்து தனித் தனியாக மருந்து எழுதிக் கொடுப்பது வழக்கம். கம்பவுண்டர் சீட்டைப் பார்த்து மருந்து