பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அதைப் பற்றிக் கொள்வார்கள். காது என்ற பொறிக்கு அது அடிமையாவதனால்தான் வேடர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரை விடுகின்றது. இப்படிப் பறவையும், விலங்கும் பொறிகளுக்கு அடிமைப் பட்டு அல்லலுறுவதைப் பார்க்கிறான் ஆறறிவு படைத்த மனிதன். ஆயினும் அவற்றைப் போலவே அவனும் அந்தக் கண்ணிகளில் சிக்கிக் கொள்கிறானேயன்றித் தப்புவதற்கு ஞானமாகிற கத்தியை உபயோகப்படுத்தாமல் இருக்கிறான். - உபதேசம் வீணாதல் மனம் என்ற ஒன்றை ஐந்து பொறிகளும் பாசமாகிய கயிற்றினால் கட்டிச் சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. மனம் கொஞ்ச நேரம் நின்றால்தானே இறைவனை நினைக்க முடியும்? மிக வேகமாகச் சுழன்று கொண்டே இருக்கிற இயந்திரத்தின் அருகில் போய்த் தொட்டால் அது தொட்டவனைத் தூக்கி எறிந்துவிடும். கல்லையோ, வேறு ஏதாவது பொருளையோ போட்டாலும் அப்படித்தான் தூக்கி எறியும். ஐந்து பொறி களுக்கும் அடிமைப்பட்டு எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும் மனமுடையவனிடம் சென்று கொஞ்சம் உபதேசம் பண்ணிப் பாருங்கள். நம்மை அப்படியே தூக்கி எறிந்து விடுவான். ஒடுகின்ற ரெயிலின்மிது கல்லை விட்டெறிந்தால் அந்தக் கல் திரும்ஆம் எறிந்தவன் மேலேயே வந்து விழுவது போல, ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டவன் காதிலே உபதேசம் செய்தால் சொன்ன வேகத்தைக் காட்டிலும் மிக வேகமாக அது திரும்பி வந்துவிடும். தாடகை மேலே ராமன் அம்பை விட்டான். அது என்ன ஆயிற்று? "சொல்ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல்லொக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்றன்றே!" அவன் விட்ட அம்பு, முனிவர் சாபம் இட்டால் எப்படி வேகமாகப் போய்ச் சாபத்துக்கு ஆளானவர்களைத் தாக்குமோ 2C)