பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கலக்கிக் கொடுப்பார். ஒரு சமயம் ஊரில் திடீரென்று பேதி நோய் கண்டது; ஊர் முழுவதும் பரவி விட்டது. அவர் வீட்டுக்கு வரு கின்ற நோயாளிகள் யாரைப் பார்த்தாலும் பேதி என்று சொல்லித் கொண்டு வந்தார்கள். டாக்டர் என்ன செய்வார்? ஒவ்வொரு வருக்கும் தனித்தனி மருந்தா எழுதிக் கொடுப்பார்? ஒரு பெரிய பாத்திரம் நிறையக் காலரா மருந்தைக் கலந்து வைத்து, வருகின்ற நோயாளிகளுக்கு அதை எடுத்தெடுத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே எந்தக் காலத்திலும் பெரும்பாலானவர்களுக்கு மிகுதியாக வருகின்ற வியாதியாகக் காம நோய் இருப்பதனால், வைத்தியராகிய அருணகிரிநாதப் பெருமான் அந்த வியாதிக்கான மருந்தை மிகப் பெரிய அளவில் கலந்து வைத்திருக்கிறார். மனிதர்களுக்குள்ள நோய் இருவகை. ஒன்று உடம்புக்கு வருவது; மற்றொன்று மனத்திற்கு வருவது. மனம் நல்ல வழியில் செல்லாமல் அல்லாத வழியில் சென்று தகாததைச் செய்வதற்கு முக்கியமான காரணம் ஆறு வகையில் வருகின்ற நோய்கள். தான் நினைத்தபடி காரியங்களைச் செய்வதற்குப் பயன்படும் இந்திரி யங்களைப் பெற்றிருப்பது சுகமான உடம்பு, நல்ல உடம்பு. அதில் நோய் வந்துவிட்டால் அப்படிச் செய்ய முடியாது; நம் விருப்பப்படி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. கைகால் நன்றாக இருந்தால் அவை தொழில்பட வேண்டும். ஒருவனுக்குக் கையும் காலும் எப்பொழுது பார்த்தாலும் ஆடிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவை இயங்கு கின்றது கண்டு நல்லநிலை என்று சொல்ல இயலாது. அது நோய். எப்பொழுது ஆட வேண்டுமோ அப்பொழுது ஆட வேண்டும்; சும்மா இருக்க வேண்டியபொழுது ஆடாமல் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் சுகமான உடம்பு என்று சொல்ல முடியும். மனத்தில் வரும் நோய் அவ்வாறே ஒன்றைவிட்டு ஒன்றையே எண்ணிக் கொண் டிருந்தால் அந்த மனம் சுகமான மனமாகாது. நல்லவற்றை எண்ண வேண்டும்; பல சமயங்களில் எண்ணாமல் இருக்கவும் பழக வேண்டும். - - . . - ... 3O2