பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் ஆசை. ஆகவே இறைவன் கடமையைச் செய்வதில் இன்பத்தையும் பிணைத்து வைத்திருக்கிறான். பரம்பரை வளர ாம் உலகில் வாழ்கிறோம். நாம் வாழ்வது போல உலகம் வாழ வேண்டும். தொடர்ந்து மனித பரம்பரை வளர வேண்டும். பரம்பரை நல்ல முறையில் வளர வேண்டுமானால் வித்துப் போடுவது என்ற கடமை நல்ல முறையில் நடக்க வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் யாரும் கடமையைச் செய்ய மாட்டார்கள். சுவை மிக்க பழத்திற்குள்ளே வித்தை வைத்தாற்போல, மனித பரம்பரையின் வளர்ச்சிக்கான வித்தைக் காம இன்பத்திற்கிடையே வைத்தான் இறைவன். முறைப்படி வாழ்ந்தால் தர்மம் செய்யலாம்; காமம் அநுபவிக்கலாம். ஆனால் காமத்தின் முடிவு என்ன? பரம்பரைத் தர்மத்தைக் காப்பாற்றுவது. தசரதன் விருப்பம் தசரதன் சொல்கிறான். அறுபதாயிரம் மனைவியோடு வாழ்ந்தவன் அவன். இருந்தாலும் குழந்தை பிறக்கவில்லை. மிக்க துயரத்தோடு வசிட்டரைப் பார்த்துப் பேசுகிறான். தன் குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டுமென்ற நினைப்பைக் காட்டிலும் உலகம் ஆகிய குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டு மென்று அவன் நினைக்கிறான். 'நான் அறுபதினாயிரம் ஆண்டு செவ்வனே இவ்வுலகத்தைக் காத்துவிட்டேன். எனக்குக் குறை ஒன்றும் இல்லை. என் காலத்திற்குப் பிறகு, இவ்வுலகைக் காப்பவர் இல்லாமையால், இவ்வையகம் கலங்கி விடுமே என்கிற மனக்கலக்கந்தான் உண்டாகிறது' என்கிறான். 'அறுபதி னாயிரம் ஆண்டு மாண்டுற உறுபகை யொடுக்கிஇவ் வுலகை ஒம்பினேன் பிறிதொரு குறையிலை எற்பின் வையகம் மறுகுறு மென்பதோர் மறுக்க முண்டரோ.” அவன் ஆற்றி வந்த கடமைகளைத் தொடர்ந்து ஆற்றி வருவதற் காகவே பிள்ளை வேண்டும் என்கிறான். 3O7