பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தருமியின் வேண்டுகோள் மதுரையில் ஆலவாய்ப் பெருமானுக்கு அருச்சனை பண்ணின் கொண்டிருந்தார் தருமி என்ற குருக்கள். நக்கீரர் திருமுருகாற்றுப் படை பாடுவதற்கு மூல காரணமாய் இருந்தவர் அவர் என்று சொல்ல வேண்டும். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடக் காரண மாக இருந்தது அப்புலவர் பெற்ற சாபம். அந்தச் சாபத்திற்குக் காரணம் ஒரு பாட்டு. அந்தப் பாட்டுக்குக் காரணம் தருமி. அவர் - பிரம்மச்சாரி. அவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டு மென்ற ஆசை. அதற்கு வேண்டிய பொருள் அவரிடத்தில் இல்லை. பாண்டிய அரசன் தன் கருத்தைத் தெரிவிக்கும் கவிதையை இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் தருவதாகச் சொல்லி ஒரு கிழியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். தருமிக்குக் கவிதை பாட வராது. அவர் இறைவனிடம் போய், 'சுவாமி எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்று ஆசை, பொருளில்லையே! அரசன் கட்டித் தொங்க விட்டிருக்கும் பொன் எனக்குக் கிடைக்கும்படியாகச் செய்யுங்கள் என்றா கேட்டார், அப்படிக் கேட்டிருந்தால், 'குருக்களுக்கு எதற்கையாகல்யாணம்?" என நம்மைப் போல இறைவன் சொல்லியிருந்தாலும் சொல்லி யிருப்பாரே! அவர் அப்படிக் கேட்கவில்லை. 'இறைவனே! உனக்கு நான் மாத்திரம் பூசை பண்ணினால் போதுமா? உன்னுடைய வழிபாடு தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது. என் அளவில் அந்தப் பரம்பரை முடிந்துவிடப் போகிறதே! எனக்குச் சந்ததி உண்டானால்தான் உன் கைங்கரியம் தொடர் அறாது நிகழும். இந்தப் பரம்பரைச் செல்வம் மிக அரியது. இதை என்னோடு முற்றுப் பெறும்படியாகச் செய்யக் கூடாது. முற்றுப் பெறாதவாறு செய்ய எனக்கு ஒரு குழந்தை வேண்டுமே! அதற்கு ஒரு தர்ம பத்தினி வேண்டாமா? மணம் செய்து கொள்ளலாம் என்றால் கையில் பொருள் இல்லையே' எனக் கேட்டார். “எந்தையே, கந்தர் தந்தாய், இளைத்தனன், பொருளோ இல்லை. மைந்தன்உண் டாக என்னை மன்றல்செய் வித்தல் வேண்டும்." 3O8