பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் "தாதையுந் தாயும் உற்ற - சுற்றமும் தனமும் மற்றும் வேதனை வினையி னேற்கு நீயலால் வேறும் உண்டோ? கோதிலா மரபின் வந்த குலந்தலை அழியு மோஎன்று ஆதிநாயகன்றன் பாதத் தழுதுவீழ்ந் தினைய சொன்னான்." -> (பழைய திருவிளையாடல்) தசரதன் விருப்பமும் தருமியின் விருப்பமும் தாம் செய்த அறம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே. அதற்குப் மகப் பேறு வேண்டும். அது பெற மனையாட்டி வேண்டும். அறத்திற்குத் துணையாக நிற்பவள் மனைவி. அப்படி இல்லாமல் தன் காமத்தை மாத்திரம் தீர்ப்பவளாக ஒருவன் மனையாட்டியை வைத்துக்கொண்டால், தாசியை வைத்துக் கொண்டது போன்றதுதான். அப்படித்தான் சாஸ்திரம் சொல்கிறது. காமம் அல்லது இன்பம் கடமையைச் செய்வதற்குப் பாது காப்பாக இருக்க வேண்டுமேயன்றிக் கடமையை மறப்பதற்குக் காரணமாக இருத்தலாகாது. - உண்மை அன்பு மனையாட்டியைப் பார்க்கும்போது, "மேனி அழகாக இருக் கிறாளா? நிறைய அணிகள் அணிந்திருக்கிறாளா? ஆற்றல் மிக்க வளாக இருக்கிறாளா?' என்று சிலர் பார்க்கலாம். மனைவி அழகாய் இருக்க வேண்டுமென்று வள்ளுவர் சொல்லவில்லை. அழகான பெண்டாட்டிதான் வேண்டும் என்று இருந்தால் சொல்லியிருக்கலாம். அழகாக இல்லாத பெண்கள் கல்யாணம் ஆகாமலேயே நின்று விடுகிறார்களா? அழகு என்பது கண்ணுக்குக் கண் வேறுபடும். ஒருவன் கண்ணுக்கு அழகற்றவளாய்த் தோன்று பவள் மற்றவன் கண்ணுக்கு ரம்பையாகக் காட்சி அளிப்பாள். வள்ளுவர், - "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்." என்கிறார். 3C9