பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து அவ்வளவு வேகமாகத் தாடகையைத் தாக்கியது. அந்தத் தாடகை யின் மார்பு வைரம் பாய்ந்த பாறை போல் இருக்கிறது. அதைத் தொளைத்துக் கொண்டு போயிற்று, ராமன் விட்ட அம்பு. அதற்குக் கம்பர் கூறும் உவமையை இங்கே கவனிக்க வேண்டும். கல்லாத மனிதர்களுக்குக் கற்றவர்கள் உபதேசம் செய்தால் அது அவர்களது ஒரு காதில் புகுந்து மற்றொரு காதின் வழியே எவ்வளவு வேக மாக வெளியே போய்விடுமோ அவ்வளவு வேகமாகப் போயிற்று' என்கிறார். ஐந்து பொறிகளுக்கும் அடிமைப்பட்டுச் சுழன்று கொண்டே இருக்கிறவர்கள் என்ன சொன்னாலும் ஏற்கமாட்டார் கள். எப்போதும் மனம் சுழன்று கொண்டே இருக்கும் மக்களுக்கு அமைதி என்பது இல்லை. 'இவ்வாறு நான் சுழலுகிறேன்' என்று நாம் சொல்ல வேண்டியதை அருணகிரியார் சொல்கிறார். பாசக்கட்டு குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த. கு என்பது உலகம். இங்கே நாம் வாழ்கிற வாழ்க்கை பாச வாழ்க்கை. ஆத்மாவைக் கட்டியிருப்பது பாசம். ஆத்மாவானது கடவுளிடம் சொல்லாதவாறு பாசம் என்ற கயிறு அதைக் கட்டியிருக்கிறது. அந்தக் கயிற்றை ஞானமென்னும் கத்தியினால் துண்டித்தால்தான் ஆத்மா கடவுளை அடைய முடியும். அந்தக் கட்டு இருக்கிற வரைக்கும் இறைவனை அடைய முடியாது. ஒரு பசு இருக்கிறது. அது தன் கன்றுக் குட்டிக்குக் கொடுப்பதற்காக மடி நிறையப் பாலை வைத்திருக்கிறது. ஆனால் மாட்டுக்காரன் கன்றுக் குட்டியை முளையோடு முளையாகச் சேர்த்துக் கட்டி விடுகிறான். கன்றை அவிழ்த்து விட்டால்தான் பசுவின் பாலைக் கன்றுக் குட்டி உண்ண முடியும். ஆத்மாக்கள் பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டுள்ன. கயிறு அறுபட்டால்தான் ஆத்மா இறைவனை அடைய முடியும். பதியாகிய இறைவன் பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு இன்பம் தருவதற்காகவே இருக்கிறான். அதைப் பெற முடியாமல் பாசமாகிற கயிற்றால் கட்டுண்டிருக்கிறது, ஆன்மா. பாசம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கை இவ்வுலக வாழ்க்கை; பாச வாழ்க்கை. 21.